சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வினோத்துடன் ஆன கூட்டணியை முறித்துக் கொண்ட கமல்.. மணிரத்தினத்தால் ஏற்பட்ட விளைவு

Director H.Vinoth dropped KH233 and commit next film for Dhanush: தமிழ் சினிமாவில் கடுமையான முயற்சிக்குப் பின் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக இருந்த ஹெச்.வினோத் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

நடைமுறை வாழ்வில்  நிகழ்ந்த குற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து  அருமையான திரை கதையை அமைத்து சாமானியனுக்கும் புரியும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் வல்லவர் ஹெச் வினோத்.  திரைக்கதைக்கு தேவையான சம்பவங்களை  கிராபிக்ஸ் கொண்டு உட்பகுத்துவதோடு படத்திற்கான பட்ஜெட்டையும் அதிகரிக்காமல் திறமையாக கையாள்வது இவருடைய ஸ்பெஷாலிட்டி.

தனக்கென சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹெச்.வினோத்திற்கு துணிவு தந்த வெற்றியால் உலக நாயகன் கமலஹாசனின் KH233  படம் இயக்குவதற்கான வாய்ப்பு தேடி வந்தது. இதற்காக தீவிரமாக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கமலஹாசனிடம் பல கரெக்ஷன்களை வாங்கி வைத்திருந்தார்.

Also read: சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

இந்தியன் 2 விற்கு பின் தொடங்குவதாக இருந்த KH233 சில பல காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இந்நிலையில் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தான் தயாரிக்கும் படங்களின் வரிசையை வெளியிட்டது.  அதில் ஹெச் வினோத் உடனான படம் கமலின் படம் இடம்பெறவில்லை. அடுத்ததாக கமல் மணிரத்தினத்துடன்  தக்லைப்பில் இணைந்து படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டனர். மணிரத்தினம் உருவாக்கிய கதாபாத்திரம் வேறு திசையில் பயணிப்பதால்  ஹெச் வினோத்துடனான கூட்டணி சரி வராது என்று முடிவு பண்ணினார் கமல்.  இதனால் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி எழுதி வைத்திருந்தஹெச் வினோத்தை கண்டுகொள்ளாமல் வெயிட் பண்ண சொல்லிக் கொண்டே  வந்தார் கமல்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பொறுத்து பார்த்த ஹெச் வினோத் ஒரு கட்டத்திற்கு பின் தாமாகவே முன்வந்து படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அடுத்து படம் பண்ணிட்டு வாரேன் என்று சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பாக தனுஷை வைத்து  இயக்க முடிவு பண்ணிவிட்டார்.  தனுஷும் அவர் இயக்கிய ஒரு படத்தை நிறுத்தி வைத்து ஹெச் வினோத்துடன் கூட்டணி சேருகிறார்.

திறமையான இயக்குனர் பிளஸ் உலகநாயகன் கமல் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஆகிப்போனது. முன்னணி நடிகர்களின் கால்சீட்க்காக காத்திருப்பது திறமையான இயக்குனர்களுக்கு வேதனையான ஒன்றாகிறது இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானது அல்ல.  மக்கள் கதையையும் இயக்குனர்களையும் நம்பினால் மட்டுமே இந்த நிலை மாறும் என்பது உறுதி.

Also read: மகா கலைஞன் என நிரூபித்த கமல்.. இறந்த நண்பருக்காக உலகநாயகன் செய்யும் தரமான சம்பவம்

Trending News