வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாதி பெருமைகளை பேசியே முத்தையா எடுத்த 5 படங்கள்.. கார்த்தியை வைத்து செய்த 2 வசூல் வேட்டை

முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை மையமாக கொண்ட வன்முறைகளை பற்றி பேசியிருந்தார். இந்த படத்தில் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் எடுத்த அத்தனை படங்களுமே சாதியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது.

கொம்பன்: 2015 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பன். இந்த படத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், கோவை சரளா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். கொம்பன் படத்தில் கார்த்தி கொம்பைய்யா பாண்டியன் என்னும் பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவராக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: ஒரே சாயலில் இருக்கும் விருமன், திருச்சிற்றம்பலம்.. யாரு யாரை காப்பி அடிச்சான்னு தெரியல!

மருது: 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மருது. இந்த படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளியானது. மருது படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பிட்ட சமூகத்து பெண்களின் வீரத்தை பற்றி இந்த படம் பேசியிருந்தது.

தேவராட்டம்: 2019 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவராட்டம். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் ரொம்ப வெளிப்படையாகவே சாதிய பெருமையை பேசியிருந்தது. பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் கமர்சியல் ஹிட் அடித்தது.

Also Read: தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

புலிக்குத்தி பாண்டி: புலிக்குத்தி பாண்டி உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது. இந்த படத்தை முத்தையா எழுதி, இயக்கி தயாரித்திருந்தார். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி ஆகியோர் நடித்திருந்தனர். 2021 ஆம் ஆண்டு பொங்கலன்று ரிலீஸ் ஆன இந்த படம் வெற்றி பெறவில்லை.

விருமன்: கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கார்த்தி-முத்தையா கூட்டணியில் உருவான திரைப்படம் விருமன். இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டெர்டெய்னர் நிறுவனம் தயாரித்திருந்தது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக கார்த்தியை நடிக்க வைப்பது தென் மாவட்ட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது என்பதை அறிந்த முத்தையா, கார்த்தியை வைத்து வசூல் வேட்டை செய்து வருகிறார்.

Also Read: யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

Trending News