வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

LCU கேள்விப்பட்டிருக்கோம் அது என்ன NCU? ரஜினிகாந்த் ஓகே சொல்லி பற்ற வைத்த நெருப்பு

Director Nelson creates NCU and planned to Jailer 2: கொடுக்குற தெய்வம்  கூரையை பிரித்துவிட்டு கொட்டும் என்பதற்கு சரியான உதாரணம் நம்ம கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் தான். ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு சறுக்கலுக்கு பின் மீண்ட நெல்சன் திலீப்குமாருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு தான்.

சின்ன திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பும் வேற மாதிரி இயக்குனர் நெல்சன் திலிப் குமார். இவர் இயக்கிய வேட்டை மன்னன் கை கொடுக்காது போகவே ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் கோலமாவு கோகிலா மூலம் கம்பேக் கொடுத்தார்.

காதல், காமெடி, திரில்லர் மூன்றின் கலவையாக இவரது இயக்கத்தில் வெளிவரும் படங்கள் நல்ல விமர்சனங்களுடன் வசூலில் தன்னிறைவை அடைகின்றன. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து வெளிவந்த டாக்டர் படமோ, வசூலில் 100 கோடி கிளப்பை அடைந்து மாஸ் காட்டியது.

அடுத்ததாக இளைய தளபதி விஜய் உடன் கைகோர்த்த நெல்சன் திலிப் குமார் அதே பார்முலாவுடன் அளவுக்கு மீறிய ஹீரோயிசத்ததால் சற்று அடி வாங்கிப் போனார்.  இருந்தாலும் போட்ட முதலுக்கு பங்கம் வராமல் ஓரளவு லாபத்துடனையே மீண்டது விஜய்யின் பீஸ்ட்.

Also read: 2kகிட்ஸை திசை மாற்றும் நெல்சன், லோகேஷ்.. விதை போட்ட அந்த படம்

பீஸ்ட்க்கு பின் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நெல்சன் தலைவருடன் இணைந்து ஸ்டைலா கெத்தா ஜெயிலரில் தரமான சம்பவம் செய்து வசூலில் 650 கோடிக்கு மேல் கலெக்ஷன் உடன் பாக்ஸ் ஆபிஸில் கெத்தாக வலம் வந்தார்.

இவரைப் போலவே  அதிரடி காட்டி வளர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ்  லசு கான்செப்ட்டை பயன்படுத்தி வெற்றி கொடுத்ததுடன் அந்த வெற்றியின் தொடர்ச்சியாக பல பாகங்களை இயக்கியும் வருகிறார் லோகேஷ். அதேபோன்று  நெல்சன் NCU (நெல்சன் cinematic Universe) என்ற புது ட்ரெண்டை உருவாக்கி கோலமாவு கோகிலாவையும் ஜெயிலரையும் இணைக்க உள்ளார்.

அதாவது போதைப் பொருள் கடத்தலையும், சிலைகடத்தலையும் குற்றப் பின்னணியாக கொண்டு ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயாரிக்க இறங்கி உள்ளார்.  ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் ரஜினியும் NCUக்கு ஓகே சொல்ல டபுள் எனர்ஜியுடன் நயன்தாராவை  ஜெயிலர் 2வீலும் இணைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் நெல்சன்.

Also read: பிச்சிக்கிட்டு போகும் நெல்சன் சம்பளம்.. ஒரே படத்தால் அட்லீயை ஓரங்கட்டிய பாக்ஸ் ஆபிஸ் கிங்

Trending News