நண்பனுக்காக கொடுத்த காசுக்கு மேல கூவிய நெல்சன்.. நம்பியவர் மைண்ட் வாய்ஸ்சையும் தாண்டி நெல்சா செய்த சம்பவம்

nelson
nelson

இதுவரை இயக்குனராக நெல்சன் எந்த படத்தில் சறுக்கியது கிடையாது. கோலமாவு கோகிலா, பீஸ்ட் டாக்டர், ஜெய்லர் என அவர் தொட்டதெல்லாம் துலங்கியுள்ளது. இப்பொழுது நெருங்கிய நண்பர் ஒருவருக்காக முதல் முதலாக சறுக்கல்களை சந்தித்துள்ளார்.

சமீபத்தில் நண்பன் கவின்னுக்காக லோகேஷ் பிளடி பாக்கர் என்ற படத்தை தயாரித்தார். புதுமுக டைரக்டர் சிவபாலன் இதை இயக்கியுள்ளார், ஆனால் இந்த படம் மோசமான பிளாப் ஆனது. போஸ்டர் ஒட்டிய காசுகளை கூட வசூலிக்கவில்லை.

லிப்ட், டாடா, என ஓரளவு நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வந்த கவின்னுக்கு இந்த படம் மோசமான விளைவுகளை கொடுத்தது. இந்த படத்தால் இதை வாங்கி விநியோகம் செய்தவர்களுக்கு 8 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவின்னின் அடுத்தடுத்த படங்களின் வியாபாரமும் சறுக்கியது.

பெரும் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் நெல்சன் இடம் முறையிட்டுள்ளனர். பார்த்துக்கலாம் என பின்வாங்கிய நெல்சன் இடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். நேராக விநியோகஸ்தர் ஒருவர் நெல்சன் வீட்டிற்கே சென்றுள்ளார்.

அந்த விநியோகத்திற்கு நஷ்டம் அடைந்த எட்டு கோடி ரூபாயையும் அப்போதே கொடுத்து நஷ்டத்தை ஈடு கட்டியுள்ளார்கள் நெல்சன். இதனால் விநியோகஸ்தர் ஆடிப் போய் தம்பி எனக்கு 5 கோடி ரூபாய் போதும் எனக் கூறியும் நெல்சன் ஏற்றுக்கொள்ளவில்லை. அடடா விநியோகஸ்தர் மைண்ட் வாய்ஸில் நிச்சயமாக நெல்சனுக்கு கோயில் கட்டும் எண்ணம் தோன்றியிருக்கும்.

Advertisement Amazon Prime Banner