திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விரைவில் ரெடியாகும் பொன்ராம் யூனிவெர்ஸ்.. இணையப்போகும் போஸ் பாண்டி, ரஜினி முருகன்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த பொன்ராம் முதன் முதலில் தோஸ்த் என்னும் படத்தை இயக்கினார். அதன் பின்னர் இயக்குனர் ராஜேஷின் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார். இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது.

அதன் பின்னர் பொன்ராம் 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையையே திருப்பி போட்டது. பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் போஸ் பாண்டியை இன்றளவும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read : எங்களுக்கு தோண்டிய குழியில நீயே விழுந்துட்ட.. மேடையில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியை வைத்து ‘ரஜினி முருகன்’ என்னும் படத்தை இயக்கினார். 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருந்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றி இல்லையென்றாலும் இந்த படம் பொருளாதார ரீதியாக தப்பித்தது.

பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்த படம் தான் சீமராஜா. இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு தோல்வி படமாக அமைந்ததோடு இந்த கூட்டணியும் பிரிந்தது. சிவகார்த்திகேயனும் கிராமத்து கதைகளில் இருந்து கொஞ்ச நாள் விலகி ஹீரோ, டாக்டர் டான், பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்தார். இதில் டாக்டர் மற்றும் டான் ஹிட் படமாக அமைந்தது.

Also Read : வெற்றி, தோல்வியை தலைக்கு ஏற்றாத சிவகார்த்திகேயன்.. எதிர்பாராத கூட்டணியில் அடுத்த படம்

இந்நிலையில் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம் எடுக்க சிவகார்த்திகேயனை அணுகினார். ஆனால் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்துவிட்டார். பொன்ராம் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தின் கதையோடு சிவகார்த்திகேயனிடம் சென்று இருக்கிறார்.

அந்த கதையில் ரஜினி முருகன் கதை பகுதியில், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் போஸ் பாண்டி வருவது போன்ற அமைக்கப்பட்டு இருக்கிறதாம். சிவா மற்றும் சூரிக்கு இதில் இரட்டை வேடங்கள். இந்த படம் பொன்ராமின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஆக வர இருக்கிறது. இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Also Read : விலை போகாத படங்களை நேக்காக தள்ளிவிடும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தில் பலிக்காமல் போன பாட்சா

Trending News