செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

நடிகராக அவதாரம் எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி.. எந்த படத்தில் தெரியுமா.!

Director Rajamouli will take the avatar as an actor: ‘அரைச்ச மாவையே அரைக்காமல்’ தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி, பிரம்மாண்டமாக படம் எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவர் ஈ, பாகுபலி, ஆர்ஆர் ஆர் போன்ற படங்களின் மூலம் தன்னுடைய திறமையை உலகறிய செய்தவர். அதிலும் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை தட்டி தூக்கி இந்திய திரை உலகை பெருமைப்படுத்தியது.

இதை அடுத்து ராஜமௌலி இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இப்போது அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே இவர் செல்போன் விளம்பர படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கினார். இப்போது பிரபாஸ், கமலஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தில் இயக்குனர் ராஜமௌலியும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக சயின்டிபிக் பிக்சனில் உருவாகிறது. சமீப காலமாகவே வரலாற்றுப் பின்னணியில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

Also Read: கதை முக்கியம் என ராஜமௌலி நிருபித்த படங்கள்.. 5 வேற்று மொழி ஹீரோக்கள் தமிழில் வளர்ந்த கதை

இயக்குனர் ராஜமவுலி நடிக்கும் புதிய படம் அப்டேட்

இந்த நிலையில் ‘கல்கி 2898 AD’ திரைப்படமானது 6000 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்ற கதைகளத்தை மீண்டும் துவங்கும் என்றும் கூறப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதோடு துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோரும் இதில் லீட் கேரக்டரில் நடிக்க உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல இந்திய அளவில் பல நடிகர் நடிகைகள் இதில் தொடர்ந்து இணைகின்றனர்.

அதோடு மேலும் அட்ராக்ஷனை அதிகப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியும் இந்த படத்தில் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகைப்படுத்தி விட்டது. இந்தப் படம் வரும் மே 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப் போவதாகவும் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

Also Read: கங்குவா படத்தில் குவிந்துள்ள 10 பிரபலங்கள்.. பிரசாந்த் நீல், ராஜமௌலிக்கே டஃப் கொடுக்கும் சிறுத்தை சிவா

Trending News