செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

நடிகரை கையோடு கூட்டிட்டு போன சங்கர்.. எல்லாம் இந்தியன் 2-வில் நடந்த கூத்துதான் காரணம்

Director Shankar gave the opportunity to the Tamil actor in a Telugu film: தமிழ் சினிமாவில் கையாளாத கதையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து மசாலா கதைகளையும் எடுத்து முடித்தாகிவிட்டது. இதனால் இன்றைய நடைமுறையில் பல படங்கள், இதற்கு முன் வெற்றியடைந்த படங்களின் அடுத்த பாகமாக தயாராகி வருகிறது. அதில் இப்போது முன்னணியில் இருப்பது 28 வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன். 

“இந்தியன் ஈஸ் பேக்” என்ற டேக் லைனுடன் டிஜிட்டல் மயமான உலகத்தில் ஊழலை எதிர்கொள்ள வருகிறார் நம்ம இந்தியன் தாத்தா. தயாரிப்பாளருக்கு ஆப் அடித்து 450 கோடிக்கு மேல் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வருகிறது இந்தியன் 2. கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், எஸ் ஜே சூர்யா போன்ற பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் பலர் இணைந்துள்ளனர். 

திரைப்படத்தின் காட்சிகளின் நீளம் காரணமாக இந்தியன் 2 மற்றும் 3 என இரு பாகங்களாக உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களிலும் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் களைகட்டி வருகிறார். நாலு வருஷமா நடக்கிற இந்த சூட்டிங்கில் கமல், சித்தார்த், எஸ் ஜே சூர்யா என எல்லாரும் பிஸியாகி விட்டனர். 

Also read: யானை வாய்க்கு சோளப்பொரி கொடுத்த ஒடிடி.. முன்னணி நடிகரின் படத்தால் புஸ்வானமாகிப்போன கமல்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக வரும் மெகா பட்ஜெட் படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டி வருகிறார் எஸ் ஜே சூர்யா. இவரின் நடிப்பை பார்த்து மிரண்டு, அரண்டு போன இயக்குனர் சங்கர் இவர் இயக்கும் தெலுங்கு படத்திலும் எஸ் ஜே சூர்யாவை நடிக்க கேட்டுள்ளாராம். 

தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் “கேம்சேஞ்சர்”  படத்தை இயக்குனர் சங்கர் தான் இயக்குகிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பில் எட்டு நாட்கள் மட்டுமே எஸ் ஜே சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டு புதிதாக அவருக்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவரை இப்படத்தில் இணைத்துள்ளார்.

ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ளார் எஸ் ஜே சூர்யா. தற்போது கேம் சேஞ்சரை தவிர நானி நடிக்கும் ஒரு படத்திலும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரக்கனின் அரக்கத்தனம் ஆந்திராவிலும் அரங்கேற உள்ளது.

Also read: எஸ் ஜே சூர்யாவுக்கு வரிசை கட்டி இருக்கும் 5 படங்கள்.. தனுஷ்டன் மோத போகும் நடிப்பு அரக்கன்

Trending News