சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வயிறு குலுங்க சிரிக்க வைத்த டி.பி.கஜேந்திரன் நடித்த 6 படங்கள்.. குள்ள சினேகாவின் தந்தையாக அடித்த லூட்டி

டிபி கஜேந்திரன் அவர்கள் ஒரு உதவி இயக்குனராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர். மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் விசுவிடம் உதவி இயக்குனராக இவர் பணி புரிந்தார். தன்னுடைய குருவை போலவே குடும்பப் பின்னணி கதைகளை கொண்டு தான் இவர் படம் எடுத்தார். மேலும் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆனால் இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரம் நன்றாகவே செட்டாகிவிட்டது. காமெடி நடிகர்களுக்கு இணையாக இவர் நகைச்சுவையில் கலக்கினார்.

பம்மல் கே. சம்பந்தம்: நடிகர் மற்றும் இயக்குனர் மௌலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக வெளியானது தான் பம்மல் கே சம்பந்தம். கமல்ஹாசன், சிம்ரன், அப்பாஸ், சினேகா, போன்றவர்கள் நடித்த இந்த படத்தில் டிபி கஜேந்திரன் சினிமா இயக்குனராக வருவார். கமலஹாசனை சுத்த தமிழ் பேச வைக்க இவர் படும் பாடு ரொம்பவும் நகைச்சுவையாக இருக்கும்.

Also Read: டி பி கஜேந்திரனின் சிறந்த 5 படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த மிடில் கிளாஸ் மாதவன்

சொக்கத்தங்கம்: இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, உமா, பிரகாஷ்ராஜ் , கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்த திரைப்படம் சொக்கத்தங்கம். இந்த படத்தில் இவர் பிரகாஷ்ராஜின் உறவினராக நடித்திருப்பார் காமெடியோடு சேர்ந்த வில்லத்தனத்தை அழகாக காட்டியிருப்பார்.

பாணா காத்தாடி: இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, சமந்தா, மௌனிகா, கருணாஸ், முரளி, மனோபாலா, பிரசன்னா ஆகியோர் நடித்த திரைப்படம் பாணா காத்தாடி இந்த படத்திலும் டிபி கஜேந்திரன் அவர்கள் நடித்திருப்பார்.

சீனா தானா001: இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் சீனா தானா 001. மலையாளத்தில் வெளியான சி ஐ டி மூசா எனும் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் பிரசன்னா, வடிவேலு, மணிவண்ணன், ஆகியோர் நடித்திருப்பார்கள். நகைச்சுவை ஜாம்பவான்களான வடிவேலு மற்றும் மணிவண்ணனுக்கு இணையாக டிபி கஜேந்திரன் அவர்களும் நகைச்சுவையில் கலக்கி இருப்பார்.

Also Read: பிரபு பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

சிதம்பர ரகசியம்: 1985 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் விசு இயக்கி நடித்த திரைப்படம் சிதம்பர ரகசியம். இந்த படத்தில் எஸ்வி சேகர், அருண் பாண்டியன், இளவரசி, ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் டி பி கஜேந்திரன் அவர்கள் அட்வகேட் அகத்தியனாக இந்த படத்தில் நடித்திருப்பார்.

பேரழகன்: டிபி கஜேந்திரன் நடிப்பில் பேரழகன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. சூர்யா, ஜோதிகா நடித்த இந்த படத்தில் வரும் குள்ள சினேகா காமெடி இன்று வரை பிரபலமாக இருக்கிறது. இதில் அந்த சினேகா கேரக்டருக்கு அப்பாவாக நடித்திருந்த கஜேந்திரன் அவர்கள் இன்றுவரை அந்த காமெடி காட்சியை பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

Also Read: அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள் தியா.. குடும்பத்துடன் வெளியான லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்

Trending News