செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த 5 மாஸ் ஹீரோகளுக்கு ஏத்த ஆளு இவங்க மட்டும் தான்.. ரஜினி, கமலுக்கு அதிக ஹிட் கொடுத்த இயக்குனர்கள்

ஒவ்வொரு நடிகர்களுக்கும் இந்த இயக்குனருடன் படம் நடித்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும். அதே நேரத்தில் இவர்களுடைய கதை என்னுடைய கேரக்டருக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என்று சில மாஸ் ஹீரோக்கள் அந்த இயக்குனர்களை விடாமல் அவர்கள் இயக்கத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர் யார் என்று பார்க்கலாம்.

ரஜினி- எஸ்.பி முத்துராமன்: ரஜினி ஆரம்ப காலத்தில் என்ன தான் வில்லன் கேரக்டரிலும், குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்தாலும் அதன் பிறகு ஹீரோவாக அவதரித்து 170 படங்களுக்கும் மேல் நடித்து தற்போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட இவர் ஆரம்ப கால படங்கள் என்றாலே இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் தான் அதிகமான படங்கள் வெளிவரும். இவர்கள் கூட்டணியில் முதலாவதாக ரஜினி நடித்து வெளிவந்த படம் புவனா ஒரு கேள்விக்குறி. இதைத்தொடர்ந்து ஆடு புலி ஆட்டம், ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, எங்கேயோ கேட்ட குரல் போன்று தொடர்ந்து 24 படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்.

Also read: ரஜினி போட்ட விதைதான் இப்போ நீங்க சாப்பிடுறீங்க! அஜித், விஜய்யை கொண்டாட தலைவர் போட்டு கொடுத்த ரூட்

கமல்-ஜி என் ரங்கராஜன்: கமல் நடிப்பில் வெளிவந்த மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், ராணி தேனீ, மகராசன் போன்ற ஆறு படங்களுக்கு இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அப்போதைய காலத்தில் கமல்ஹாசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்பையும் ஹிட் படங்களின் கொடுத்த இயக்குனர் தான் ஜி என் ரங்கராஜன். இவர் 2021 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் காலம் ஆகிவிட்டார்

அஜித்- சிறுத்தை சிவா மற்றும் சரண்: ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு இயக்குனர் ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்த வகையில் அஜித்துக்கும் சிறுத்தை சிவா மீது இருந்த அளவு கடந்த நம்பிக்கையால் அவருடன் தொடர்ந்து விவேகம், விசுவாசம், வேதாளம்,வீரம் போன்ற படங்களில் நடித்தார். அத்துடன் இயக்குனர் சரண் இயக்கத்திலும் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்று தொடர்ந்து நான்கு படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: கமல் வித்தியாசமான நடிப்பை காட்டிய ஐந்து படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சப்பாணி

விஜய்- அட்லீ: விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருக்கிறது. அதிலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி, மெர்சல், பிகில் இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் படமாக ஆனது. அதனாலயே விஜய் மற்றும் அட்லீ இருவருமே ரொம்பவே நெருக்கமான நண்பர்களாகவும் மாறிவிட்டார்கள்.

சூர்யா- ஹரி: இயக்குனர் ஹரியுடன் சூர்யா சுமார் ஐந்து படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இருவரும் இணைந்து ஆறு, வேல், சிங்கம் 1,2,3 போன்ற படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். தற்போது இவர்கள் கூட்டணியில் மறுபடியும் ஒரு படத்தில் இணையுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்படம் சிங்கம் வரிசையில் நான்காவது படமாக இருக்கலாம் அல்லது முற்றிலும் புதிய படமாகவும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சூர்யா பெயரில் வரும் மற்றொரு வாரிசு நடிகர்.. அப்பாவோட மார்க்கெட்டை குறைக்காம இருந்தா சரிதான்

 

Trending News