Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஆசை தோசை அப்பள வடைன்னு மோசம் போன 4 ஹீரோக்கள்.. இரண்டாவது கூட்டணியில் விஜய்க்கு வைத்த சூனியம்

ஆசை தோசை அப்பள வடைன்னு மோசம் போன 4 ஹீரோக்கள்.. இரண்டாவது கூட்டணியில் விஜய்க்கு வைத்த சூனியம்

ஒரு படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்து விட்டால் அதே கூட்டணியில் அடுத்த படத்திற்கு ஆசைப்படுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் முதல் கூட்டணியில் செம ஹிட் அடித்து இரண்டாவது படத்தில் ஹீரோக்களை காலை வாரிவிட்ட இயக்குனர்கள் நான்கு பேரை பற்றி […]

ஒரு படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்து விட்டால் அதே கூட்டணியில் அடுத்த படத்திற்கு ஆசைப்படுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் முதல் கூட்டணியில் செம ஹிட் அடித்து இரண்டாவது படத்தில் ஹீரோக்களை காலை வாரிவிட்ட இயக்குனர்கள் நான்கு பேரை பற்றி இதில் பார்க்கலாம். அப்படி நடிகர் விஜய் சேதுபதி மட்டுமல்லாது தன்னுடைய காரியரையே கேள்விக்குறியாக்கினார் இயக்குனர் ஒருவர்.

விஜய் முதல் முறையாக இயக்குனர் பிரபுதேவாவுடன் இணைந்த படம் போக்கிரி. இந்த படம் விஜய்க்கு அதிரபுரி ஹிட் அடித்தது. அடுத்தும் இவர்கள் ஆசைப்பட்டு இணைந்த படம் வில்லு. இந்த படம் முதலுக்கே மோசமானது. விஜய் லிஸ்டில் ஃபெயிலியர் இடத்தை இந்தப் படம் கொடுத்தது.

விஜய் சேதுபதியுடன் முதல் படத்தில் கூட்டணி போட்டார் நயன்தாரா வீட்டுக்காரர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படம் இவர்களது கூட்டணியில் சக்கை போடு போட்டது. இதனை நம்பி இரண்டாவதாக இவர்கள் இணைந்த படம் காத்து வாக்கில் இரண்டு காதல். இந்த படம் ஃபெய்லியர் லிஸ்டில் சேர்ந்து இவர்கள் கூட்டணியை பங்கம் பண்ணியது.

கொம்பன் முத்தையா மற்றும் பருத்திவீரன் கார்த்தி இருவரது கூட்டணியில் வெளிவந்த படம் தான் கொம்பன். இதுதான் அந்த இயக்குனருக்கு கொம்பன் முத்தையா என்ற பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பின் இவர்கள் இணைந்த படம் விருமன் இது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

கௌதம் வாசுதேவ் மேனன் சிம்புவை வைத்து எடுத்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இவர்கள் அடுத்து இணைந்த படம் “அச்சம் என்பது மடமையடா” இது முதல் படம் அளவிற்கு இவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.