வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நிராசையாக போன சிவகார்த்திகேயன், தனுஷ் ஆசை.. என்னதான் முட்டி மோதினாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்

Actor Sivakarthikeyan and Dhanush: ஹீரோவாக தனுஷ் முதலில் என்ட்ரி கொடுத்திருந்தாலும், இவர் மூலமாக வந்த சிவகார்த்திகேயன் தனுஷுக்கு இணையாக வந்துவிட்டார். அதுவும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இரண்டு பேரும் சமமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திற்கும் போட்டி போட்டு முந்துவதற்கு முயற்சி செய்து நடித்து வருகிறார்கள்.

அதே மாதிரி இவர்களுடைய ஆசையும் ஒன்றாகவே இருக்கிறது. அதாவது இவர்கள் இரண்டு பேருக்கும் ரஜினி என்றால் மிகவும் பிடித்தமான குரு மற்றும் ரோல் மாடல் என்று சொல்லலாம். அதனால் எப்படியாவது ரஜினி படத்தில் நடித்தாக வேண்டும் என்று இவர்கள் இருவருமே ஆசையாக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

Also read: தட்டு தடுமாறி 100 கோடி வசூலை தொட முடியாத மாவீரன் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரிப்போர்ட்

ஆனால் இவர்கள் ஆசை நிராசையாக தற்போது போய்விட்டது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு முந்துவதற்குள் இடையில் ஒரு இளம் நடிகர் வந்து அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். அதாவது நேற்று ரிலீசான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துவிட்டது.

அத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை பார்த்து ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரஜினி இப்படத்தில் மாஸ்காட்டி இருக்கிறார். இதில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக வளர்ந்து வரும் இளம் ஹீரோ வசந்த் ரவிக்கு இவருடைய மகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து விட்டது.

Also read: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள்.. ரஜினி, விஜய்யை வைத்து காய் நகர்த்தும் மாஸ்டர் பிளான்

இப்படத்தில் ஏசிபி அர்ஜுன் பாண்டியன் ஆக நடித்திருப்பார். ஆனால் தலைவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப்பட்டு காத்துக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் அப்படி இப்பொழுது வரை கிடைக்கவில்லை.

அடுத்தபடியாக தனுஷ் நேரடியாகவே ரஜினியிடம் பலமுறை உங்கள் படத்தில் எனக்கு ஒரு சில கதாபாத்திரங்கள் நடிக்க கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் கொடுக்காமல் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதாவது சொல்வார்களே என்ன தான் முட்டி மோதினாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்று. அது இவர்கள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.

Also read: படப்பிடிப்பில் அக்கப்போரு பண்ணும் தனுஷ்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

Trending News