வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மதிக்காத ராதிகா, கெஞ்சிய கமலஹாசன்.. பின் ஆண்டவர் வச்ச கச்சேரி!

உலகநாயகன் கமல்ஹாசன் 80களில் பல நடிகைகளுடன் நடித்து வந்த நிலையில், நடிகை ராதிகா உடன் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு வெளியான சிப்பிக்குள் முத்து, 1987-ஆம் ஆண்டு வெளியான பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் ராதிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கமல்.

ராதிகா பொதுவாகவே படப்பிடிப்பு தளத்தில் சற்று சுட்டி தனமாக நடந்து கொள்பவர். அவருக்கு சமமாகவே கமல்ஹாசனும் ஏதாவது சுட்டி தனத்தை அவ்வப்போது செய்து வருவாராம். இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு ராதிகா அளித்த பேட்டியில் கமல்ஹாசன் தன்னிடம் படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சிய ஒரு விஷயத்தை கூறி உள்ளார்.

Also Read : நினைச்சதை விட படு கேவலமாக செயல்படும் ராதிகா.. படிச்சவனு காட்டுவதற்காக செய்த தரங்கெட்ட செயல்

நடிகை ராதிகாவிற்கு ரத்த அழுத்த பிரச்சனை இருந்ததால் படப்பிடிப்பின் போது அடிக்கடி மயக்கம் அடைந்து விடுவாராம், இல்லை என்றால் சற்று அசதியாக இருக்கு என்று கூறி படப்பிடிப்பை நிறுத்தி விடுவாராம். இதனிடையே ராதிகாவின் பிரச்சனையை அறிந்துகொண்ட கமல்ஹாசன் ஒருமுறை ராதிகாவிடம் வந்து நான் இன்று படப்பிடிப்பை விட்டு கிளம்ப வேண்டும். நீ மயக்கம் போட்டு நடிக்குமாறு கெஞ்சினாராம்.

அதைக்கேட்ட ராதிகா என்னால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று கமலஹாசன் சொன்னதை நிராகரித்து விட்டாராம். கமல்ஹாசனும் சரி போய்த் தொல என ராதிகாவை திட்டிவிட்டு அந்த நாள் ஷூட்டிங்கை நடத்தி விட்டு சென்றாராம். ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடைபெற்று உள்ளது.

Also Read : சிம்புவை திட்ட சொன்னாங்க.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த நடிகை ராதிகா

இதன் காரணமாக ராதிகாவிற்கு மயக்கம் வந்ததையடுத்து கமல்ஹாசனுடன் நடிக்கும்போது திடீரென கீழே விழுந்தாராம். அதை பார்த்த கமல்ஹாசன் சனியன் நான் சொல்லும் போது மயக்கம் போட்டு விழாது, நேரங்கெட்ட நேரத்துல இந்த மாதிரியான வேலை எல்லாம் செய்யும் என பயங்கரமாக கலாய்த்தாராம்.

கமலஹாசன் திட்டியதை கலகலப்பாக பகிர்ந்துகொண்ட ராதிகா இதனை தன்னால் எப்போதும் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார். நடிகை ராதிகாவின் பிறந்தநாளின்போது கமல்ஹாசன் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து, கட்டி அணைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இந்த செய்தியும் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read : சரத்குமார் முதல் மனைவி விவாகரத்து, ராதிகா காரணம் இல்ல.. இந்த நடிகை தானாம்

Trending News