Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தயாரிப்பாளரை ஆட்டிவைக்கும் விவாகரத்து நடிகர்.. வாயடைத்துப் போன திரையுலகம்

தயாரிப்பாளரை ஆட்டிவைக்கும் விவாகரத்து நடிகர்.. வாயடைத்துப் போன திரையுலகம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அந்த நடிகர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் என்று எல்லா பக்கமும் பிரபலமாகி இருக்கிறார். சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை அறிவித்த நடிகர் தற்போது தன்னுடைய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி […]

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அந்த நடிகர் தற்போது ஹாலிவுட், பாலிவுட் என்று எல்லா பக்கமும் பிரபலமாகி இருக்கிறார். சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை அறிவித்த நடிகர் தற்போது தன்னுடைய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. மேலும் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு படம் பண்ணவும் சம்மதித்திருக்கிறார். விவாகரத்து அறிவிப்பால் நடிகருக்கு இனி படவாய்ப்புகள் வராது என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது முக்கிய தயாரிப்பாளருக்கு நடிகர் படம் நடித்துக் கொடுக்க இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் அந்த தயாரிப்பாளரிடம் புதுமுக இயக்குனர்கள் யாரும் வேண்டாம் என்று ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் சில இளம் இயக்குனர்களை குறிப்பிட்டு அவர்களில் ஒருவர்தான் படத்தை இயக்க வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம். இதனால் பாவம் அந்த தயாரிப்பாளர் எந்த இயக்குனரை பிடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறாராம்.

அந்த தயாரிப்பாளர் திரையுலகில் மிகவும் தடாலடியான மனிதர். எல்லா விஷயத்திலும் ரொம்ப கறார் காட்டும் அவரின் மீது திரையுலகில் பலருக்கும் ஒரு பயம் இருக்கும். அப்படிப்பட்ட அந்த தயாரிப்பாளரையே விவகாரத்து நடிகர் ஆட்டி வைப்பதை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.