கோலிவுட்டில் வெற்றிப் படங்களை இயக்கியவர்களில் மோகன் ராஜாவுக்கு தனி இடம் உண்டு.குறிப்பாக,ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ரசிகர்கள் மத்தியில் இன்று ரை பேசப்படும் படமாக இருந்து வருகிறது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த நிலையில்,‘தனி ஒருவன் 2’படம் குறித்த புதிய தகவலை இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால்,இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் விறுவிறுப்பான கதைக்களம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேபோல்,நடிகர் கார்த்தியுடன் மோகன் ராஜா தனது அடுத்த படத்திற்காக இணைந்துள்ளார்.கார்த்தியின் 31-வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.மேலும்,வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக மோகன் ராஜா கூறியுள்ளார்.
இதனால், மோகன் ராஜாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.ஒருபுறம் ‘தனி ஒருவன் 2’ படத்தின் பணிகள்,மறுபுறம் கார்த்தியுடன் புதிய கூட்டணி என இந்த இரண்டு படங்கள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




