Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

தனது மகனைப் போல நஸ்லெனிடம் அக்கறை காட்டிய சூர்யா.. நெகிழ்ச்சியான சம்பவம்!”

தனது மகனைப் போல நஸ்லெனிடம் அக்கறை காட்டிய சூர்யா.. நெகிழ்ச்சியான சம்பவம்!”

கோலிவுட் ஸ்டார்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.நடிப்பில் மட்டுமல்லாமல்,சக நடிகர்களிடம் அன்பாகப் பழகுவதிலும், படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் அக்கறை காட்டுவதிலும் அவர் தனித்துவமானவர்.


அந்த வகையில், சூர்யா தன்னிடம் காட்டிய அன்பு மற்றும் அக்கறை குறித்து நடிகர் நஸ்லென் பகிர்ந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்று வருகிறது.
சூர்யா மிகவும் இனிமையான மனிதர் என்றும்,தனது பணியில் அதிக நேர்த்தியைக் கடைப்பிடிப்பவர் என்றும் நஸ்லென் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக,சூட்டிங்யின்போது அவர் நடந்துகொண்ட விதம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.பொதுவாக ஒரு திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்கும்போது நடிகர்களுக்குப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.


அந்த வகையில்,ஒரு கிளைமாக்ஸ் காட்சியின்போது நஸ்லெனிடம் சூர்யா காட்டிய அக்கறை அவரை நெகிழ வைத்துள்ளது.அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக, தேவையான பாதுகாப்புக் கவசங்களை அணிந்துள்ளாரா? என்பதை சூர்யா நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம்.
மேலும்,தன்னைத் தனது மகனைப் போலவே கருதி சூர்யா அக்கறையுடன் விசாரித்ததாக நஸ்லென் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஒரு பெரிய நடிகராக இருந்தாலும், உடன் பணியாற்றுபவர்களிடம் இவ்வளவு அன்பாக நடந்துகொள்வது அவரது நல்ல குணத்தை வெளிப்படுத்துகிறது.
இதனால்,சூர்யாவின் நடிப்பைத் தாண்டி அவரது எளிமையான குணமும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.நஸ்லென் பகிர்ந்துள்ள இந்த அனுபவம் ரசிகர்கள் மத்தியில் சூர்யா மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.