தீபாவளிக்கு நமுத்துப்போன பட்டாசான பிரின்ஸ்.. ஏமாற்றத்தை கொடுத்த முதல் நாள் வசூல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளி வெளியீடாக நேற்று வெளியானது. பைலிங்குவல் திரைப்படம் ஆக உருவான இந்த திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நினைத்த வேளையில் படத்திற்கு வரும் விமர்சனங்கள் படக்குழுவை அதிர வைத்துள்ளது.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற திரைப்படங்களின் மூலம் 100 கோடியை தாண்டி வசூலித்தார். அதே அளவுக்கு இந்த படமும் வசூல் பெரும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் பிரின்ஸ் திரைப்படத்திற்கான வசூல் மிகவும் மந்தமாக இருக்கிறது.

Also read : காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ்

அதாவது இப்படம் 55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதன் படி இதன் திரையரங்கு உரிமை தமிழில் 30 கோடிக்கும் தெலுங்கில் 10 கோடிக்கும் விற்கப்பட்டது. அந்த வரிசையில் இப்படம் ரிலீசுக்கு முன்பே 40 கோடி லாபம் பார்த்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 2.5 கோடி வசூல் ஆகி இருக்கிறது.

மேலும் முதல் நாளில் இப்படத்திற்கான டிக்கெட் 1.5 லட்சம் அளவுக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் இப்படம் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேபோன்று தெலுங்கில் 27 லட்சம் வசூலாகி இருக்கிறது. இந்த வசூல் சிவகார்த்திகேயனின் முந்தைய திரைப்படங்களின் முதல் நாள் வசூலை காட்டிலும் மிகவும் குறைவாக இருக்கிறது.

Also read : பிரின்ஸ் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியா, தோல்வியா? மரண பீதியில் வெளிவந்த முழு விமர்சனம்

விடுமுறை நாளாக இருந்தாலும் இப்படத்திற்கான வரவேற்பு குறைவாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் கதை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதிகமாக காமெடியை மட்டுமே நம்பி களமிறங்கும் சிவகார்த்திகேயனுக்கு இது ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இப்படிப்பட்ட விமர்சனங்களால் பிரின்ஸ் படத்தின் இந்த வசூல் இனிவரும் நாட்களில் குறையும் என்று தெரிகிறது. இப்படத்திற்கு போட்டியாக களமிறங்கிய சர்தார் திரைப்படம் தற்போது வசூலில் முன்னேறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read : ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்.. அடிமாட்டு விலைக்கு பிசினஸ் பேசும் ஓடிடி நிறுவனம்