வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. தீபாவளிக்கு ரிலீஸாகும் 6 படங்கள்

Diwali Release Movies: ரஜினியின் வேட்டையன், லப்பர் பந்து போன்ற படங்கள் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு சரவெடியாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியாகிறது.

அவ்வாறு பெரிதும் எதிர்பார்க்கும் படங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் படமும் அக்டோபர் 31 வெளியாகிறது. அடுத்ததாக ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிப்பில் கலகலப்பாக உருவாகி இருக்கிறது பிரதர் படம்.

தீபாவளிக்கு வெளியாகும் ஆறு படங்கள்

சரண்யா பொன்வண்ணன், பூமிகா, நட்டி நடராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவினின் பிளடி பகர் படமும் தீபாவளிக்கு தரை இறங்குகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் அவர் பிச்சைக்கார தோற்றத்தில் இருப்பதால் படம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நவம்பர் ஒன்றாம் தேதி அஜய் தேவகன், அக்ஷய்குமார், தீபிகா படுகோன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிங்கம் எகைன் படம் வெளியாகிறது. இந்த படத்திற்காக பாலிவுட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன்,‌ திரிப்டி திமிர், வித்யா பாலன், மாதுரி தீட்சித் ஆகியோர் நடிப்பில் பூல் புலையா 3 படம் வெளியாகிறது. ஆகையால் இந்த தீபாவளி கொண்டாட தியேட்டரில் தரமான படங்களை வெளியாகிறது.

Trending News