திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நாயகன் பட கமலின் சாயல் யாருடையது தெரியுமா.? எம் எஸ் பாஸ்கர் சீக்ரெட், அரண்டு போன ஆண்டவர்

Nayagan Movie Kamal: கமலின் படங்களை பொருத்தவரை வித்தியாசமாக எடுப்பதிலும், நடிப்பதிலும் சரித்திரம் நின்னு பேசக்கூடிய அளவிற்கு வல்லமை படைத்திருக்கும். முக்கியமாக இவரின் படங்கள் இப்ப மட்டும் இல்லாமல் எத்தனை காலங்கள் ஆனாலும் பொக்கிஷமாக பேசப்பட்டு வரும். எத்தனையோ படங்களில் வித்தியாசமான கெட்டப்களை போட்டு நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடித்த படம் காலம் போன போக்கில் தற்போது கூட மகத்துவம் வாய்ந்த படமாக பேசப்பட்டு வருவது நாயகன். இப்படம் மும்பையை கலக்கிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமாக வெளிவந்தது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமாக தோள் கொடுத்தவர் பிசி ஸ்ரீராம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா என்று சொல்லலாம்.

Also read: அவ்வை சண்முகி ரிட்டன்ஸ்.. அட்ராசிட்டியை ஆரம்பித்த உலக நாயகன்

ஆரம்பத்தில் புரியாத புதிராகவும், பல சர்ச்சைகளும் வெடித்த நிலையில் போகப் போக இப்படம் நல்ல வரவேற்பு பெற்று 175 நாட்களைக் கடந்தது. இதில் கமலின் நடிப்பு ரொம்பவே எதார்த்தமான ஒரு மனுசனாகவும், கதையின் நாயகனாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

அதிலும் வருகிற ஒவ்வொரு சீனும் அச்சு அசல் மாறாமல் ஒரு தலைவராகவும், குழந்தைகளுக்கு அப்பாவாகவும் நடிப்பை பின்னி பெடல் எடுத்து இருப்பார். அப்படிப்பட்ட இவர் அந்தப் படத்தில் முன்னுதாரணமாக ஒருவரை நினைத்து நடித்து இருக்கிறார் என்பது நாம் அனைவரும் இதுவரை அறியப்படாத உண்மையாக இருக்கிறது.

Also read: உலகநாயகன் அறிமுகப்படுத்திய 6 தொழில்நுட்பங்கள்.. தேவர் மகன் படத்தில் இப்படி ஒரு டெக்னாலஜி இருந்ததா?

இந்த உண்மையை தற்போது எம்எஸ் பாஸ்கர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது இப்படத்தை அவர் பார்த்த பொழுது கமலிடம் நீங்க யார் சாயலில் நடித்திருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுது கமல் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு எம் எஸ் பாஸ்கர் கூறியது பேராசிரியர் ஐயா அன்பழகன் அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் முன்னுறுத்தி தான் நீங்கள் நடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் நடிப்பை பார்த்ததும் எனக்குப் புரிந்து விட்டது என்று கூறியிருக்கிறார். இவர் சொன்னதை கேட்டு கமல், எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று வியப்பில் அரண்டு போய் பார்த்திருக்கிறார். இதுவரை இந்த சீக்ரெட் தெரியாத நிலையில் தற்போது இந்த ஒரு விஷயம் பலருக்கும் ஆச்சிரியத்தை கொடுத்து வருகிறது.

Also read: தனித்துவமான டைட்டிலை பெற்ற 6 நடிகர்கள்.. கமலுக்கு உலகநாயகன் என பெயர் வைத்தது யார் தெரியுமா?

Trending News