புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. நெல்சன் தான் கொஞ்சம் சொதப்பிடாப்ல

பத்தாண்டுகளுக்கு பிறகு பேட்டி தரும் விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கிய தளபதி விஜய்க்கு வரவிருக்கும் பீஸ்ட் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கோவிட் சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை என கூறப்பட்டது. எப்பொழுதும் ஆடியோ லாஞ்சில் விஜய் பேச்சை கேட்க காத்துகொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் பின்நாளில் விஜயுடன் ஒரு நேர்காணலை சன் டிவி வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

தற்போது சன் டிவியின் யூடியூப் சேனலில் “விஜய்யுடன் நேருக்கு நேர்” என்ற தலைப்பில் விஜய் பேட்டியின் ப்ரோமோ வெளியிடப்பட்டபோது ரசிகர்கள் குஷியடைந்தனர். இந்த பேட்டியின் ப்ரோமோதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது, ஏனெனில் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் விஜய் பேட்டி இது.

இயக்குனர் நெல்சனே கேள்விகள் கேட்டுள்ள இந்த நேர்காணல் ப்ரோமோக்களில் விஜய்யிடம் அவரே பல கேள்விகளை முன்வைத்துள்ளார். “வீட்டில் 4 கார்கள் இருந்தும் வாக்களிப்பதற்கு ஏன் சைக்கிளில் வந்தீர்கள் என்பது முதல் ஏன் தொலைக்காட்சியில் பேட்டியளிப்பதை நிறுத்துவிட்டீர்கள் என பல கேள்வி வைக்கப்பட்டுள்ளன. எப்பொழுதும் போல தன் பாணியில் விஜய் பதில் அளித்திருப்பதை கேட்க அவருடைய ரசிகர்கள் தற்போதே காத்துள்ளனர். விஜய் பேட்டியும், பீஸ்ட் படமும் அடுத்தடுத்து வருவதால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். பேட்டியில் நெல்சன் சற்று தயங்கி, தயங்கி பேசுவதால் வேறு யாராவது எடுத்து இருக்கலாமே என்று கலாய்த்து வருகின்றனர்.

பெரும்பாலும் நடிகர்கள் சமூகவளைத்தில் பட ப்ரோமோஷன் செய்வதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மறுபுறம் விஜய், தனது படங்களை ப்ரோமோஷன் செய்வதில் கொஞ்சம் தனித்து தான் நிற்கிறார். எடுத்துக்காட்டாக, கடந்த பத்தாண்டுகளில் திரைப்படம் தொடர்பான எந்தப் பேட்டிகளிலும் அவர் காணப்படவில்லை என்றாலும், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் ரசிகர்கள் விரும்பி கேட்கும் “குட்டி கதைகள்” என அழைக்கப்படும் சில குட்டி குட்டி கதைகளை கூறி வருகிறார்.

இன்றைய டிஜிட்டல் உலகிலும் சமூக வலைத்தளம் தவிர்த்து இவ்வாறான நேர்காணல்கள், ப்ரோமோ வீடியோ போன்றவற்றில் கலந்துக்கொண்டு விஜய், கோலிவுட்டில் தனது சமகாலத்தவர்களை விட ஒரு படி மேலே தான் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறன் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, வி.டி.வி கணேஷ் மற்றும் லில்லிபுட் ஃபருக்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது,

Trending News