ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

போலீசுக்கு தண்ணி காட்டும் மர்ம கொலையாளி.. டோவினோ தாமஸின் ஐடென்டிட்டி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Identity Movie Review: பொதுவாக மலையாள திரை உலகில் க்ரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்கள் அதிகமாக வெளிவரும். அதை சுவாரஸ்யம் விறுவிறுப்பு கலந்து கொடுப்பதில் அவர்கள் கில்லாடிகள்.

அந்த வரிசையில் இந்த வருடத்தின் முதல் திரில்லர் படமாக வெளியாகி இருக்கிறது ஐடென்டிட்டி. அகில் பால், அனாஸ் கான் இயக்கத்தில் டோவினோ தாமஸ், திரிஷா, வினய் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதை படி பெண்கள் டிரையல் ரூமில் ஆடை மாற்றுவதை வீடியோ எடுக்கும் ஒருவர் அவர்களை மிரட்டி பணம் கேட்கிறார். ஒரு பெண்ணை மிரட்டும் போது மர்ம நபர் ஒருவர் அவரை கொலை செய்து விடுகிறார்.

இதை நேரடியாக பார்க்கும் திரிஷா அதை வெளிப்படுத்த நினைக்கும் போது விபத்துக்கு ஆளாகிறார். அதில் அவருடைய நினைவுகள் அழிந்து போகிறது.

ஐடென்டிட்டி முழு விமர்சனம்

இருந்தாலும் அவருக்கு தெரிந்த நினைவுகளை வைத்து குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் போலீஸ் அதிகாரியான வினய்.

அவருக்கு உதவ வருகிறார் ஹீரோ டோவினோ தாமஸ். ஸ்கெட்ச் ஆர்டிஸ்ட் ஆன இவர் திரிஷா சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளியை வரைகிறார்.

ஆனால் வந்த முகமோ டோவினோ தாமஸ் உடையது. இதனால் போலீஸின் சந்தேகப்பார்வை அவர் பக்கம் திரும்புகிறது. இதில் குற்றவாளி யார்? காவல் துறை அவர்களை கண்டுபிடித்ததா?

இந்த மூவருக்கும் குற்றவாளிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பதுதான் படத்தின் கதை. கதையில் இருக்கும் அதே சுவாரஸ்யம் திரைகதையிலும் இருக்கிறது.

முதல் பாதி முழுக்க அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டத்திலேயே நகர்கிறது. அதற்கேற்றார் போல் கதாபாத்திரங்களும் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கின்றனர்.

ஆனால் இரண்டாம் பாதி கதையிலிருந்து ட்ராக் மாறியது போல் தெரிகிறது. அதிகபட்சமான ஆக்சன் ஹீரோயிசம் ஆகியவை தேவையில்லாத ஆணியாகவும் உள்ளது.

அதே போல் புது புது கதாபாத்திரங்கள் வருவதும் நம்ப முடியாதது. இதனால் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் தடம் மாறுகிறது.

ஆனாலும் டோவினோ தாமஸ் வழக்கம்போல மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோல் திரிஷாவின் கதாபாத்திரமும் அழுத்தமாக இருக்கிறது.

இசை ஒளிப்பதிவு டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி தான் படத்தின் மிகப்பெரும் பலவீனமாக உள்ளது.

இருந்தாலும் திரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற படம் தான் இந்த ஐடென்டிட்டி. லாஜிக் மீறல்கள் மைனஸ் ஆக இருந்தாலும் தாராளமாக படத்தை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Trending News