புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 லிஸ்டில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றம்.. சன் டிவியை திணறடித்த விஜய் டிவி

This week’s Top 6 TRP rating list: சற்றும் எதிர்பாராத அதிரடி திருப்பத்துடன் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதில் டாப் 6 சீரியல்களில் வழக்கம்போல் இல்லாமல் ஏகப்பட்ட மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பல மாதங்களுக்குப் பிறகு சன் டிவிக்கு தண்ணி காட்டி, மறுபடியும் விஜய் டிவி விட்டதை பிடித்து விட்டது.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 6-வது இடத்தை விஜய் டிவியில் மகா சங்கமத்தின் மூலம் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் தான் பிடித்துள்ளது. இந்த சங்கமத்தில் ஒரு வழியாக கதிர்- ராஜியின் திருமணம் பாக்யா தலைமையில் நடந்து இரண்டு சீரியல்களையும் சூடு பிடிக்க வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 5-வது இடத்தில் சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் உள்ளது. இந்த சீரியலை பொறுத்தவரை யாரு எப்பொழுது வில்லனாகவும் வில்லியாகவும் மாறுகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் பொன்னியின் விஷயத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்னவென்று சின்ராசுக்கு மறைக்கும் விதமாக பொன்னி செய்யும் ஒவ்வொரு விஷயமும் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது.

4-வது இடம் சன் டிவியின் கயல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. பல வாரங்களாக கோமா ஸ்டேஜில் இருந்த கயல் தற்போது வீட்டிற்கு வந்து பெரியப்பாவின் சூழ்ச்சியிலிருந்தும் தங்கையும் குடும்பத்தையும் காப்பாற்றி விட்டார். இதனை தொடர்ந்து எழிலுக்கும் கயலுக்கும் கூடிய விரைவில் கல்யாண நிகழ்ச்சியை ஆரம்பித்தால், நாடகம் போரடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிரடி மாற்றத்துடன் வெளியான இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்

3-வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இதில் முத்து- மீனா இருவரும் இப்போதுதான் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் கணவன் மனைவியாக வாழ துவங்கினார்கள். ஆனா அதற்குள் மீனாவின் தம்பி சத்யாவால் முத்து- மீனா இருவருக்குமே பிரிவினை ஏற்பட்டுள்ளது. முத்து எப்போது சத்யாவை பற்றிய உண்மையை மீனாவிடம் சொல்வார் என்ற பரபரப்புடன் இந்த சீரியல் ஒவ்வொரு நாளும் நகர்கிறது.

தொடர்ச்சியாக 2-வது இடத்தை சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. இதில் ஆனந்தி தான் தனக்கு எல்லாமே என்று பைத்தியக்காரத்தனமாக அன்பு சுற்றிவரும் வேளையில், மித்ரா பண்ணுன காரியத்தால் மகேஷுக்கும் ஆனந்திக்கும் என்ன நடந்தது என்று தெரியாமல் நாடகத்தை வேற ட்ராக்கில் கொண்டு போகின்றனர்.

முதலிடத்தை பல மாதங்களுக்குப் பிறகு இப்போது சன் டிவியின் எதிர்நீச்சல் பிடித்திருக்கிறது. இதில் கதிரின் மாற்றம் தற்போது எதிர்நீச்சல் நாடகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அத்துடன் ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி இருவரும் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பித்து தர்ஷணியை தேடிப்பிடித்து குணசேகரின் முகத்திரையை கிழிக்க போகிறார்கள்.

ஆனால் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் டிஆர்பி டாப் 6 இடத்தைப் பிடிக்கும் சுந்தரி மற்றும் இனியா சீரியல்களை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை போன்ற மூன்று சீரியல்களும் முன்னேறி இருக்கிறது. அடுத்ததாக சன் டிவியின் எதிர்நீச்சலை ஓரம்கட்ட விஜய் டிவி டார்கெட் செய்துள்ளது.

Trending News