வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

TRP Rating: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. ஆட்டம் கழண்டு போய் நிற்கும் சிங்க பெண்ணே

Serial TRP Rating: சின்னத்திரை பொருத்தவரை சீரியலுக்கு மட்டுமே மக்களிடம் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பற்றி பார்த்து வருகிறோம். அதனால் இந்த வார டிஆர்பி யில் முதல் 6 இடத்தை எந்த சீரியல் பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம். வழக்கத்திற்கு மாறாக ஒரு சீரியல் முன்னே பின்னே போய் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.

அந்த வகையில் 6.82 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் சுந்தரி சீரியல் இருக்கிறது. கார்த்திக் தன் குழந்தை உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக சுந்தரி வீட்டிற்கு வந்து மகளிடம் அன்பை காட்டி வருகிறார். ஆனால் இது பிடிக்காத சுந்தரி எப்படி தமிழிடமிருந்து கார்த்திக்கை பிரிக்கலாம் என்று தெரியாமல் சகித்துக் கொண்டு வருகிறார்.

அடுத்ததாக விஜய் டிவியில் எத்தனையோ சீரியல்கள் வந்தாலும் இந்த ஒரு சீரியல் தான் டாப் 5 இடத்தில் வந்திருக்கிறது. அதுவும் கடந்த சில வாரங்களாக மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருந்த சிறகடிக்கும் ஆசை சீரியல் தற்போது 7.24 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு பின்னோக்கிப் போய்விட்டது. அதற்கு காரணம் பொய்ப் பித்தலாட்டம் பண்ணும் ரோகிணி மாட்டாமல் எப்போதுமே முத்து மற்றும் மீனாவுக்கு மட்டும் சிக்கல் வருவதால் இந்த நாடகம் கொஞ்சம் சரிவை சந்தித்திருக்கிறது.

இதனை அடுத்து 8.05 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது வானத்தைப்போல சீரியல். துளசியை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த பொண்ணுக்கு கணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து அவரைக் காப்பாற்றுவதற்கு போராடி வருகிறார். ஆனாலும் கண் முழித்த கணவன் தங்கை துளசி எங்கே என்று கேட்கும் பொழுது பொன்னி மறுபடியும் சின்ராசை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்.

குழப்பத்தில் இருக்கும் ஆனந்தி

அடுத்ததாக 8.06 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல். ஆரம்பித்த மாதிரி கதை நகராமல் தற்போது தட்டு தடுமாறி கொண்டு வேறு திசை நோக்கி பயணித்து வருகிறது. முக்கியமாக பெண்களின் முன்னேற்றத்தை காட்டாமல் ஒவ்வொரு புது கேரக்டரை கொண்டு வந்து புரியாத புதிராக கதை நகர்வதால் மக்களிடமிருந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனால் தான் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது மூன்றாவது இடத்திற்கு போய்விட்டது.

இதனை அடுத்து கடந்த பல மாதங்களாக இரண்டாவது இடத்தில் இருப்பது கயல் சீரியல். அந்த வகையில் 8.44 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கயலின் தங்கை, தம்பி கயலை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் பிரச்சினை செய்து தனியாக இருந்த நிலையில் அனைவரையும் சமாதானப்படுத்தி தற்போது ஒன்று சேர்ந்து விட்டார்கள். ஆனாலும் இவர்களின் ஒற்றுமையை கலைக்கும் விதமாக பெரியப்பா சதி செய்து வருகிறார்.

மேலும் 9.25 புள்ளிகளை பெற்று டிஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது சிங்க பெண்ணே சீரியல். அந்த வகையில் ஆனந்தி, அழகன் யார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு நந்தன் ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார். அதனால் நந்தன் விரித்த வலையில் சிங்க பெண்ணாக இருக்கும் ஆனந்தி சிக்கி தவிக்க போகிறார். இவரை எப்படி காப்பாற்றப் போகிறார், யார் காதல் ஜெயிக்கப் போகிறது என்பது தெரியாமல் ஆனந்தி ஆட்டம் கழண்டு போய் நிற்கதியாக நிற்கிறார்.

Trending News