ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பாகிஸ்தான் அணியில் தலைவலி கொடுக்கும் 2 வீரர்கள்.. டிராவிட் போடும் பக்கா ஸ்கெட்ச்

நாளை நடக்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில்பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது.

நாளை இந்திய அணியில் களம் இறங்கும் 11 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டனர். இந்தத் தொடரில் பயிற்சிப் போட்டியில் ஆடிய வீரர்கள் அப்படியே இடம் பெறுவார்கள் என ரோகித் சர்மா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரைக்கும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் களம் இறங்குவார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய இருவரும் இடம்பெறுவார்கள் என்பதை ராகுல் டிராவிட் உறுதியாக கூறிவிட்டார்.

பாகிஸ்தான் அணியில் இப்பொழுது இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் இரண்டு வீரர்கள் என்றால் அது முஹம்மது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் அப்ரிடி மட்டுமே . அவர்களை எளிதாக சமாளிக்க டிராவிட், பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு சிறப்பான அறிவுரை வழங்கியுள்ளார்.

Also Read: தேர்வுக்குழு செய்த மிகப் பெரிய தவறு.. 2 பேரை எடுக்காததால் இந்திய அணி சந்திக்கும் பின் விளைவுகள்

அதேபோல் ராகுல் டிராவிட்டின் வளர்ப்பு வீரரான சூர்யகுமார் யாதவ், டிராவிட்டின் பயிற்சியின் கீழ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் செய்யும் தவறுகளையும், அவர் அடிக்கும் தேவையில்லாத ஷாட்டுகளையும், ராகுல் டிராவிட் குறித்து வைத்து அவருக்கு ப்ரொஜெக்டர் மூலம் அறிவுரை கொடுத்துள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. அங்கே இறங்கும் வீரர்கள் ஒருவர் நின்று விளையாடினால் கூட பெரிய இலக்கை எட்டலாம். தினேஷ் கார்த்திக், பாண்டியா, சூரியகுமார் யாதவ் யாரேனும் ஒருவர் போட்டியை கடைசி வரைக்கும் கொண்டு போனால் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Also Read: இந்திய அணியில் மிரட்டும் 360 டிகிரி வீரர்கள்.. ஏபி டிவில்லியர்ஸ்க்கு சவால் விடும் மும்மூர்த்திகள்

Trending News