புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அண்ணாச்சி வச்ச சரக்கு பார்ட்டி.. ஓவர் போதையில் அசிங்கப்பட்ட குடும்ப குத்து விளக்கு

சின்னத்திரையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய சிலரில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். தொகுப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய அவர் சின்னத்திரை சேனல்களில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசனிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டியிருக்கிறார்.

அந்த விழாவிற்கு அவர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் இருந்து பழக்கப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பொதுவாக பிரபலங்கள் வீட்டில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றால் அதில் மதுவிருந்து கண்டிப்பாக இருக்கும்.

அதே போன்று இமான் அண்ணாச்சியின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியிலும் இரவு நேர பார்ட்டி நடந்திருக்கிறது. அந்த பார்ட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நடனம் ஆடியிருக்கிறார்.

உடன் இருந்தவர்கள் எடுத்து சொல்லியும் கேட்காத அவர் அளவுக்கு மீறி குடித்து விட்டு ஒரு கட்டத்தில் முடியாமல் போதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன சக நடிகர், நடிகைகள் அவரை எப்படியோ தெளியவைத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றனர்.

தற்போது இந்த செய்தி தான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல திரைப்படங்களில் ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

அதனால் அவர் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கொஞ்சம் கிளாமராகவும் உடையணிந்து போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இதுபோன்ற பார்ட்டிகளுக்கு செல்லும் அவர் அங்கு அளவுக்கு அதிகமாக குடிப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா இப்படி மாறி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Trending News