திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டிஆர்பி இல்லாததால் பிரபல சீரியலை ஊத்தி முடிய சன் டிவி.. எதிர்நீச்சல் போல புத்தம் புது என்ட்ரி

Sun Tv New Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற நாடகங்களை வேறு எந்த சேனல்களும் கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு, காலையில் ஆரம்பித்து இரவு தூங்கும் வரை வரிசையாக சீரியல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட 16 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பகலில் 6 சீரியல்கள் இரவு 6 சீரியல்கள் என்று பிரித்து போடப்பட்டு வருகிறது. என்னதான் சன் டிவி நாடகமாக இருந்தாலும் பகல் நாடகத்தை விட இரவு நேரங்களில் வரும் நாடகத்திற்கு தான் அதிகமான மக்கள் பார்க்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் பகலில் இல்லத்தரசிகளின் பொழுது போக்கை கழிப்பதற்காக சில நாடகங்கள் விறுவிறுப்பாக வருகிறது.

Also read: வாரம் 7 நாட்களும் சீரியலை உருட்ட போகும் சன் டிவி.. கெத்து காட்டவுள்ள டிஆர்பி ரேட்டிங்

அதில் ஒரு நாடகம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த திருமகள் தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நாடகம் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் அஞ்சலி மற்றும் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான் ஹீரோ ஹீரோயின் ஆக நடித்திருப்பார்கள்.

அத்துடன் வழக்கம்போல் இதில் மாமியார் பிரச்சனை செய்து மருமகளை வெளியே அனுப்ப வேண்டும் என்று பல சூழ்ச்சிகளை செய்து வருவார். அதை எல்லாம் முறியடித்து சிறந்த மருமகளாகவும், மகளாகவும் தன்னை நிரூபித்துக் காட்டி பல உண்மைகளை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த நாடகம் அமைந்திருக்கும்.

Also read: டிஆர்பியில் அதிரடி காட்டும் விஜய் டிவி.. எதிர்நீச்சலால் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி

ஆனால் பல குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் ரொம்பவே கம்மியாகிவிட்டது.இதனால் சன் டிவியில் டிஆர்பி ரேட் இல்லாததால் பாதிலேயே ஊத்தி மூடி விட்டார்கள். இதற்கு மாறாக தற்போது சீரியல்களின் கிங்காக இருப்பது எதிர்நீச்சல் சீரியல். அதனால் இதே மாதிரி ஒரு புத்தம் புது சீரியலை இறக்கி விட்டிருக்கிறார்கள்.

அதாவது மீனா என்கிற சீரியல் 12 மணிக்கு புதிதாக வருகிறது. இதில் மீனவாக வருகிற ஹீரோயின் ஆனந்த ராகம் நாடகத்தில் வில்லியாக நடித்தவர். தற்போது மீனவாக களம் இறங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நாடகம் எதிர்நீச்சல் போல் இடம் பிடிக்குதா என்று பார்க்கலாம்.

Also read: ஜீவானந்தத்தின் வீக்னஸ் பாயிண்ட்டை குறி வைக்கும் குணசேகரன்.. தலைவன் கதறி அழும்போது குமுறி சிரித்த மருமகள்கள்

Trending News