புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பணக்கார சண்டையில் சன் டிவிக்கும், ஏஜிஎஸ்க்கும் முத்தின ஈகோ.. கோட் படத்துக்கு அடித்த ஜாக்பாட்

இன்று விஜய் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்பா மகன் என இரு வேடங்களில் விஜய் இந்த படத்தில் மிரட்டுகிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி 52 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. ஆனால் இப்பொழுது தலைக்கேறிய ஒரு ஈகோ பிரச்சனையால் ஏஜிஎஸ் இந்த படத்தை சன் டிவிக்கு கொடுக்கவில்லையாம்.

அர்ச்சனா கல்பாத்தி மற்றும் சன் டிவி இருவருக்கும் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமாக பெரிய ஈகோ பிரச்சனை ஏற்பட்டு விட்டதாம். சன் டிவி 52 கோடிகளுக்கு மேல் இந்த படத்திற்கு ஒரு பைசா கொடுக்க மாட்டோம் என விடாப்படியாய் இருந்துள்ளனர்.

கோட் படத்துக்கு அடித்த ஜாக்பாட்

பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் கோட் படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஓனராகிய அர்ச்சனா கல்பாத்தி 80 கோடிகள் வரை சேட்டிலைட் உரிமைகளை விற்று விடலாம் என்று எண்ணினார் ஆனால் வெறும் 52 கோடிகளுக்கு தான் சன் டிவி கேட்கிறது. அதனால் அவர்களுக்குள் ஒரு ஈகோ உருவாகி சன் டிவியை கழட்டிவிட்டது ஏஜிஎஸ்.

இப்பொழுது கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கிறது. இவர்கள் கிட்டத்தட்ட 75 கோடிகள் கொடுத்து இந்த படத்தின் உரிமையை வாங்கி இருக்கிறார்கள். ஜி டிவி யை பொருத்தவரை அவர்கள் இன்ஸ்டால்மெண்டில் கொடுப்பதால் பெரும் தொகைக்கு பேசி எளிதாக வாங்கியுள்ளனர்.

Trending News