ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானில் வந்த பேராபத்து.. 14 வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

20 ஓவர் உலகக் கோப்பை, போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தன் வசம் ஆகியது இங்கிலாந்து அணி. இப்பொழுது இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் 2005ல் தான் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

பாகிஸ்தான் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றதும் கோப்பை எங்களுக்குத்தான் என்று பாகிஸ்தான் நாட்டினரும், முன்னாள் வீரர்களும் மார்தட்டிக் கொண்டனர். ஆனால் நடந்த கதையே வேறு இங்கிலாந்து, பாகிஸ்தானை வென்றது.

Also Read: அப்படியே பலித்தது ஜோசியம்.. இந்திய அணி செய்த தவறுகளை அப்பவே கணித்த முன்னாள் வீரர்கள்

பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தானில் சென்று விளையாட உலக கிரிக்கெட்  நாடுகள் அனைத்தும் சிறிது அச்சம் காட்டி வருகின்றன. இந்திய நாட்டையும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அழைத்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் இந்தியாவிற்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை. இப்பொழுது இங்கிலாந்து அணி ஒரு மாதம் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்று உள்ளது. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு வந்தது பேராபத்து.

Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி

ஹோட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து வீரர்களுக்கு புதுவிதமான ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 14 பேருக்கு புதிதாக வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்கள் தொண்டை வலி மற்றும் வயிற்றுப் போக்கினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இப்பொழுது பாதி வீரர்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 14 பேரின் உடல்நிலை சரிவர தெரியவில்லை. அவர்கள் தொடரில் ஆடுவார்களா? இல்லை இங்கிலாந்து திரும்பிவிடுவார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதற்கு முன்னரே இங்கிலாந்து அணியினர், பாகிஸ்தானில் அந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

Also Read: துரோகத்தால் வீழ்ந்த ராபின் சிங்.. இந்திய அணியின் லான்ஸ் குளூஸ்னராக மாறிய தருணம்!

Trending News