சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

மரண காட்டு காட்டிட்டாம்ன.. மொத்த இங்கிலாந்தையும் மண்டையை சொறிய வைத்த குட்டி தம்பி

ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை 18 போட்டிகளில் இரண்டு தோல்விகளை மட்டுமே கண்டுள்ளது இந்திய அணி. அப்படி அணியை தயார்ப்படுத்தி வெற்றிகளை குவிக்கிறது நமது கிரிக்கெட் அணி. இப்பொழுது இளம்வயது அதிரடி வீரர்கள் இந்திய அணியை ஆக்கிரமித்து வருகின்றனர்.

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி சமன் செய்து விட்டது. சுதாரித்துக் கொண்ட இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை பழி தீர்த்தது.

இந்த போட்டிகளுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து 400 ரன்களுக்கு மேல் குவித்து எளிதாக போட்டியை வென்று விடும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அதையெல்லாம் சுக்குநூறாக்கியது இந்திய அணி.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி வாழ்வா சாவா ஒருநாள்  போட்டியில் இரு அணிகளும் மோதியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு 259 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயித்தது.

அதன்பின் தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில் தடுமாறியது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையே இருந்தது. ஆனால் போட்டியை, இங்கிலாந்து கையிலிருந்து மெல்ல மெல்ல ரிஷப் பந்ததும், ஹர்திக் பாண்டியாவும் இந்தியா பக்கம் கொண்டு வந்தனர்.

ஹர்திக் பாண்டியா 71 ரன்களில் அவுட் ஆக, இங்கிலாந்துக்கு சற்று துளிர்விட்டது. அவர் அவுட் ஆனால் என்ன, நான் இருக்கிறேன் என்று மரண காட்டு காட்டினார் நமது குட்டி தம்பி ரிஷப் பண்ட். ஒரு கட்டத்தில் 50 ஓவர் வரை செல்ல இருந்த போட்டியை அசால்டாக 42வது ஓவரிலேயே முடித்துவிட்டார். அவர் பங்கிற்கு 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் போட்டியை வென்று கொடுத்தார்.

ஒரே ஓவரில் 5 ராக்கெட் பவுண்டரிகளை விளாசினார் ரிஷப் பந்த். மொத்த இங்கிலாந்து அணியும் மைதானத்தில் மண்டையை சொரிந்து கொண்டு இருந்ததை மட்டுமே பார்க்க முடிந்தது.

- Advertisement -spot_img

Trending News