Movies: வேலைப்பளு, மன அழுத்தம் என இருப்பவர்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள ஏதாவது படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அப்படி ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும் நேரத்தில் வயிறு குலுங்க சிரித்து அதை மறக்கும் அளவிற்கு இந்த வருடம் தரமான ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன அதை பற்றி பார்க்கலாம்.
டூரிஸ்ட் பேமிலி: சசிகுமார் மற்றும் சிம்ரன் உடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே பட்டையை கிளப்பிய படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் கொஞ்சம் சென்டிமென்ட் ஆன காட்சிகளும் வரத்தான் செய்யும்.
ஆனால் அடுத்த செகண்ட் அதை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடியும் இருக்கும். இந்த படத்தை 2025 ஆம் ஆண்டின் சிறந்த படம் என்று கூட சொல்லலாம்.
பெருசு: இந்த வருடம் வைபவ் நடிப்பில் வெளியான பெருசு படம் டீசன்ட்டான விமர்சனத்தை பெற்றது. அடல்ட் காமெடியை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் ஆரம்பித்து முடியும் வரை சிரித்துக்கொண்டே இருக்கலாம்.
டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த வருடம் அட்டகாசம் பண்ணிய திரைப்படம் டிராகன். கிளைமாக்ஸ் கட்சியில் கொஞ்சம் கருத்து ஊசி போட்டாலும் படம் முழுக்கப சிரிக்கும் அளவுக்கு கண்டன்டுகளை ஹீரோ பிரதீப் வாரி வழங்கி இருப்பார்.
குடும்பஸ்தன்: ஒரு மிடில் கிளாஸ் வர்க்கத்தின் குடும்பஸ்தனை அப்படியே கண்முன் காட்டியிருப்பார் மணிகண்டன்.
மணிகண்டன் மட்டுமே சீரியஸாக சுற்றிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் அவரை சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் சுவாரசியமாக இருக்கும். அதிலும் மணிகண்டன் மற்றும் அவருடைய அக்கா கணவருக்கு இடையே நடக்கும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட்.
குட் பேட் அக்லி: எந்த ஒரு லாஜிக்கையும் பார்க்காமல் வித்தியாசமான அஜித்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதற்கு குட் பேட் அக்லி படம் தான் சரியான தேர்வு. படம் முழுக்க அஜித்தின் மாஸ் காட்சிகள் நக்கல் நையாண்டி என நல்ல ஒரு என்டர்டெய்னர் படம்.