Vishal: தமிழ் சினிமாவின் சீனியர் முரட்டு சிங்கிளாக இருந்த விஷால் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது வயதில் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதிலும் தன்னைவிட 12 வயது குறைவான நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருக்கிறார்.
இது ஒரு காதல் திருமணம் என்பதால், இந்த முரட்டு சிங்கிள் இதுவரை காதலித்த அவருடைய எக்ஸ் காதலிகளை பற்றி பார்க்கலாம்.
முன்னாள் காதலிகளின் லிஸ்ட்
வரலட்சுமி சரத்குமார்: இந்த லிஸ்டில் எப்போதுமே முதலிடத்தில் வரலட்சுமி சரத்குமார் தான் இருப்பார். ஏனென்றால் இந்த காதல் ஊர் அறிந்த காதல் ஆகவே இருந்தது. சரத்குமார் மற்றும் விஷாலுக்கு இடையே நடந்த நடிகர் சங்க தேர்தல் முரண்பாடு தான் இவர்களின் காதல் முடிவுக்கு வந்ததற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தன்னுடைய நீண்ட வருட காதலன் அவருடைய மேனேஜர் மூலம் மூலமாக காதலை முறித்துக் கொண்டது தன்னை மிகவும் பாதித்ததாக அந்த சமயத்தில் அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
லட்சுமி மேனன்: லட்சுமி மேனன் விஷாலுடன் நான் சிகப்பு மனிதன் படத்தில் நெருக்கமாக நடிக்கும் பொழுதே இவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் எழுதப்பட்டது. இந்த படத்தின் பிரமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட இந்த ஜோடி ஓரளவுக்கு காதலில் இருப்பது போல் உறுதி செய்தார்கள். இடைப்பட்ட காலத்தில் இந்த காதல் காணாமல் போனதோடு லட்சுமிமேனனும் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
அபிநயா: நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான அபிநயாவுடன் விஷால் காதலில் இருப்பதாக சொல்லப்பட்டது. திருமண தேதி கூட நிச்சயக்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அபிநயா இந்த காதல் செய்தியை மறுத்திருந்தார். தற்போதைய அவருடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து இருக்கிறார்.
ரீமாசென்: விஷால் கதாநாயகனாக அறிமுகம் ஆகும்போதே அவருடன் ஜோடி போட்டவர் நடிகை ரீமா சென். இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து திமிரு படத்தில் நடித்திருந்தார்கள். காதல் செய்தி பலவாறாக செய்தித்தாள்களில் வெளிவந்த போதிலும் இந்த காதல் பின்னர் எந்த அறிவிப்பும் இல்லாமல் போனாலும்.
அனிஷா ரெட்டி: வரலட்சுமி சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பிறகு ஒரு சில வருடங்களிலேயே விஷால் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த துணை நடிகை அனிஷா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொள்ள கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர் பெண் வீட்டில் விஷாலுக்கு திருமணம் செய்து தர மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் திருமணம் நின்று விட்டதாகவும் சொல்லப்பட்டது. அனிஷா ரெட்டி தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.