புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தியேட்டரில் காத்து வாங்கும் எதற்கும் துணிந்தவன்.. மீம்ஸ் போட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் என்று ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது.

இதனால் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது படத்தை பார்த்த ரசிகர்களை இந்தப் படம் அவ்வளவாக கவரவில்லை. மேலும் இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான நாள் முதல் காட்சியே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இப்படம் வெளியான திரையரங்குகளில் பாதிக்கு மேற்பட்ட இடங்கள் காற்று வாங்குகிறது. தற்போது படத்தை பார்த்துவிட்டு வரும் பொதுமக்கள் படத்தை பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

suryaET
suryaET

இதனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது ட்விட்டரில் பல எதிர்மறையான கருத்துக்களை சந்தித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் குறித்து பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. கடந்த வருடம் வெளியான மாநாடு, டாக்டர் போன்ற திரைப்படங்களின் முதல் நாள் வசூல் மட்டுமே பெருமளவில் இருந்தது.

et
et

அதுமட்டுமல்லாமல் அஜித்தின் வலிமை திரைப்படம் இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வசூலை எல்லாம் வைத்து பார்க்கும்போது சூர்யாவின் இந்தப் படம் அதில் பாதியை கூட பெறவில்லை. இதை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஏனென்றால் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியானது. தற்போது அதை குறிப்பிடும் ரசிகர்கள் சூர்யாவை ஓடிடி ஸ்டார் என்று அழைக்கின்றனர். ஆகமொத்தம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய எதற்கும் துணிந்தவன் தற்போது காற்று போன பலூன் போன்று ஆகிவிட்டது.

ET
ET

Trending News