புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எவ எவன் கூட அட்ஜஸ்மென்ட் பண்ணா உங்களுக்கு என்னடா.. கிழித்து தொங்கவிட்ட எதிர்நீச்சல் முரட்டு நடிகை

பெரிய திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை பெரும் புயலை வீசிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளின் திறமையை பார்க்காமல் படுக்கைக்கு அழைக்கும் சில வக்கிரம் படித்தவர்களால் இப்போது நடிப்புத் துறை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு பிம்பமும் உருவாகி இருக்கிறது.

அது மட்டுமின்றி ஒரு நடிகையை பேட்டி கண்டாலே அவரிடம் உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்ததா என்ற ஒரு கேள்வி கட்டாயமாக முன் வைக்கப்படுகிறது. இதன் மூலம் சில சேனல்கள் சுய லாபம் அடைந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் எதிர்நீச்சல் சீரியலின் முரட்டு நடிகை ஒருவர்.

Also read: ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.. சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் ஒட்டு மொத்த குடும்பம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஜான்சி ராணி என்னும் கேரக்டரில் நடித்து வருபவர் தான் காயத்ரி கிருஷ்ணன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியின் போது தன்னிடம் கேட்கப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் கேள்விக்கு வெளிப்படையான பதிலை தெரிவித்துள்ளார். அதாவது எவ எவன் கூடயோ அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு போறா, உங்களுக்கு என்னடா வந்துச்சு என ஆவேசமாக அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சா நடிக்கிறா, இல்லன்னா வீட்டுக்கு போறா, அது அவளோட விருப்பம். இதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை, ஒரு நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்க தோணுமா என சரமாரியாக கிழித்து தொங்க விட்டிருக்கிறார். மேலும் நீங்கள் இப்படி கேட்டுவிட்டால் உடனே அந்த நடிகை கண்ணீர் வடித்து பதில் சொல்ல வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Also read: அப்பத்தா கேட்ட கேள்விக்கு நந்தினி கொடுத்த பதிலடி.. அதிர்ச்சியில் குணசேகரனின் அம்மா

அதைத்தொடர்ந்து இது போன்ற கேள்வியை கேட்டு நடிகைகளை மனதாலும், உடம்பாலும் ஏன் சாவடிக்கிறீர்கள் என ஆக்ரோஷமாக தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அவருடைய இந்த தைரியமான பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனென்றால் சில யூடியூப் சேனல்கள் நடிகைகளிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அதன் மூலம் பரப்பரப்பை ஏற்படுத்தி சிறு விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். இதனால் பல நடிகைகள் இது குறித்து பேசவே தயங்கி வருகின்றனர். அந்த வகையில் ஜான்சி ராணி தன்னுடைய பாணியில் இதற்கு கொடுத்த பதிலடி இனிமேல் இது போன்ற கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சாட்டையடியாக அமைந்துள்ளது.

Also read: குணசேகரனை நடுரோட்டில் அவமானப்படுத்திய ஜான்சி.. தம்பி காலில் விழுந்து கும்பிட்ட பரிதாபம்

Trending News