செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளத்தின் மொத்த லிஸ்ட்.. ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா

டிஆர்பி-யில் மற்ற சேனல் சீரியல்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் ஆனது, ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் விரும்பும் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகிகளின் சம்பள விபரம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஆணாதிக்கத்தால் பெண்கள் படும் கஷ்டங்களை விவரிப்பதுடன் பெண்களுக்கு முன்மாதிரியான சீரியல் ஆகவும் உள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரங்களான ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி உள்ளிட்டோரின் சம்பள விவரம் என்ன என்பதை பார்ப்போம்.

ஜனனி: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா ஏற்கனவே ஒரு சில சீரியல்களின் நடித்திருந்தாலும், அவர் சம்பளம் அதிகம் வாங்கும் சீரியல் இதுதான். கன்னட நடிகை ஆக கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து தற்போது தமிழுக்கு வந்திருக்கும் ஜனனிக்கு எதிர்நீச்சல் சீரியலின் மூலம் எக்கச்சக்கமான தமிழ் ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். இவருடைய எதார்த்தமான பேச்சு மற்றும் துணிச்சலான நடிப்பு சீரியலை பார்க்கும் பெண்களுக்கு புதுவித உற்சாகத்தை கொடுக்கிறது. இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூபாய் 15,000 சம்பளமாக வாங்குகிறார்.

Also Read: குணசேகரனை எதிர்த்துப் பேசும் சில்லு வண்டு.. எதிர்நீச்சலில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்

ஈஸ்வரி: எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடிகை கனிகா நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், பாடகியாகவும் இருந்து வந்துள்ளார். அஜித், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த கனிகா திருமணத்திற்கு பிறகு தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் ஒரு எபிசோடுக்காக ரூபாய் 12,000 சம்பளம் வாங்குகிறார்.

ரேணுகா: சின்னத்திரை தொகுப்பாளரான டிடி-இன் அக்கா பிரியதர்ஷினி தான் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பல படங்களிலும் சீரியல்களிலும் ஏற்கனவே நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் இவருக்கு, முன்பை விட நல்ல பேரும் புகழும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இவர் ஒரு எபிசோடுக்காக ரூபாய் 10,000 சம்பளம் வாங்குகிறார்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நந்தினி: பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பல சூப்பர் ஹிட் சீரியல் நடித்து பரிச்சயமானவர்தான். இருப்பினும் இவருக்காகவே சிலர் இந்த சீரியலை பார்த்து வருவதாகவும் கூறி வருகின்றனர். இதில் சீரியலில் நகைச்சுவை கேரக்டரில் பலரையும் சிரிக்க வைக்கும் எதார்த்தமான நடிப்பை காட்டி வரும், நந்தினியை யாருக்கும் பிடிக்காமல் இருக்க முடியாது. இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூபாய்  15,000 சம்பளம் வாங்கினார்.

இவ்வாறு டிஆர்பி-யில் அடித்து தூள் கிளப்பும் எதிர்நீச்சல் சீரியலின் கதாநாயகிகளின் சம்பள விபரம் பலரையும் வாயடைத்துப் போக வைக்கிறது. அதிலும் இந்த சீரியலை நீண்ட நாட்களுக்குப் பிறகு திருச்செல்வன் மிக சிறப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா! என்றும் மற்ற சேனல் சீரியல் இயக்குனர்கள் பொறாமையில் பொசுங்குகின்றனர்.

Also Read: படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

Trending News