திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

புற்று நோயினால் போராடிய எதிர்நீச்சல் நடிகை.. குணசேகரன் மருமகளுக்கு இப்படி ஒரு மறுபக்கமா.?

Actress Kaniha: ஒருவருக்கு காலம், நேரம் சரியாக அமைந்து விட்டால் அவருடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ற மாதிரி நடிகை கனிகா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி என்று எல்லா பக்கமும் பிரபலமாகி விட்டார். இவர் என்னதான் வெள்ளி திரையில் ஹீரோயினாக பைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டர் மூலமாக இவருடைய கேரியர் மிகப் பிரகாசமாகிவிட்டது.

அதே மாதிரி சச்சின், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் நடித்த ஹீரோயின்களுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதற்கு இடையில் அவ்வப்போது நல்ல மாடனாக டிரஸ் போட்டு போட்டோக்களை வெளியிடுவது, அடிக்கடி வீடியோஸ் போடுவது என்று இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இவரை காட்டி வருகிறார்.

இந்த சமயத்தில் இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவித்த சோகங்களை பகிர்ந்திருக்கிறார். அப்பொழுது புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி பேசி இருக்கிறார். இதில் இவருடைய அம்மாவும் மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார் என்பதை மிக வேதனையுடன் கூறியிருக்கிறார். அதாவது என்னுடைய அம்மாவிற்கு மார்பில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு கூட்டுப் போயிருந்தோம்.

Also read: எதிர்நீச்சல் ஈஸ்வரி நடித்த 5 படங்கள்.. அஜித்தை வெறுத்து ஒதுக்கி அவமானப்படுத்திய கனிகா

அப்பொழுது என் அம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சியான நாங்கள் அந்த நிமிஷத்திலேயே எங்களுடைய வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது போல் உணர்ந்தோம். ஆனால் அதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த நேரத்தில் என் அம்மாவுடன் ஆறுதலாக இருந்தது தான் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

என் அம்மாவிற்கும் நான் பக்கத்தில் இருந்து உங்களுக்கு கூடிய சீக்கிரமே குணமாகிவிடும் என்று சொன்ன அந்த வார்த்தை தான் ஆறுதலாக இருந்தது. ஆனால் அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிய நான் மனதளவில் உடைந்து போய்விட்டேன். என்னுடைய துக்கத்தை யாரிடமும் காட்ட முடியாததால் காருக்குள் சென்று பாடல் போட்டுவிட்டு சவுண்டை அதிகரித்து கத்தி அழுது என்னுடைய துக்கத்தை காட்டினேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பின் மருத்துவர்கள் ஆலோசனைப்படி புற்றுநோய்க்கான சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில் என் அம்மா பட்ட வேதனங்களை பார்த்து மனதார நொந்து போய்விட்டேன். கடைசியாக அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மார்பகத்தை வெட்டி எடுக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் கடவுள் என் கூடவே இருந்து இதை சமாளிக்கும் விதமாக எதிர்நீச்சல் போடுவதற்கு தைரியத்தை கொடுத்தார் என கனிகா தனிப்பட்ட வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியல் கனிகா நடித்த 4 படங்கள்.. எதிரி படத்தில் பாட்டில் மணியுடன் அடித்த லூட்டி 

Trending News