வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டோட்டலா டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்.. சன் டிவி குடும்பத்துக்குள்ளேயே நடக்கும் வெறித்தனமான போட்டி

Ethirneechal serial TRP Rating Damaged: இப்போதெல்லாம் சின்னத்திரை சீரியல்களை இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்றாகிவிட்டது. இந்த வருடம் முழுவதும் டிஆர்பி-யில் டாப் 6 இடங்களில் சன் டிவியின் சீரியல்கள் தான் இருக்கிறது.

இந்த வருட தொடக்கத்தில் எதிர்நீச்சல் தான் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் நான்கு மருமகள்கள் தங்களது சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக எதிர்நீச்சல் போடுவது போல் தொடக்கத்தில் இந்த சீரியலை காட்டினார்கள். அதனால் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த ரெண்டு வருடங்களாகவே இந்த சீரியலில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடங்கப்பட்ட இடத்திலேயே தான் நிற்கிறது. நாளுக்கு நாள் இந்த சீரியலை ஜவ்வாக இழுக்கின்றனர். திருச்செல்வம் இயக்குகிற சீரியலா இது? என தலையில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் பொண்டாட்டி பண்ணிய காரியம்.. ஜெனிலியா, ஸ்ரேயா பேசியது எல்லாம் உண்மை இல்லையா?

டேமேஜ் ஆன எதிர்நீச்சல் டிஆர்பி ரேட்டிங்

இதனால் இப்போது டிஆர்பி-யில் புத்தம் புது சீரியலான சிங்கப் பெண்ணே சீரியல் தான் முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கயல், சுந்தரி போன்ற சீரியல்கள் டாப் இடத்தில் இருக்கிறது. 4-வது இடம் தான் எதிர்நீச்சலுக்கு கிடைக்கிறது.

5-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை காண்பிக்கும் வானத்தைப் போல சீரியல் உள்ளது. இவ்வாறு சன் டிவி சீரியல்களுக்குள்ளே இந்த வருடம் முழுவதும் கடும் போட்டி நிலவியது. அதில் கதையில் சொதப்புகிற எதிர்நீச்சல் சீரியல் இப்போது டிஆர்பி-யில் டோட்டலாகவே டேமேஜ் ஆகி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Also read: 2 நாள் கதறுவாங்க அப்புறம் மறந்துடுவாங்க.. 100% கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி

Trending News