வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விட்ட மார்க்கெட்டை பிடித்த திரிஷா.. 40 வயதிலும் கைவசம் இருக்கும் 6 படங்கள்

திரிஷா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தார். அப்போது டாப் நடிகர்கள் உடன் ஜோடி போட்டு முன்னணி இடத்தை வகித்தார். ஆனால் அதன் பின்பு தொடர் தோல்வி காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் திரிஷா காணாமல் போய்விட்டார். ஆனால் பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து இப்போது உள்ள ட்ரெண்டிங் நடிகைகள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி திரிஷா கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். அதுவும் பெரிய நடிகர்களின் படங்களில் திரிஷா தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் 40 வயதிலும் இப்போது 6 படங்களை திரிஷா கைவசம் வைத்துள்ளார்.

Also Read : நயன், திரிஷாவை ஓரம் கட்டிய ஐந்து “ஏ” கிரேடு நடிகைகள்.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நாங்க சளச்சவங்க இல்லை

லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என பேசப்பட்டு வருகிறது. மேலும் தி ரோட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தி ரோடு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதைத்தொடர்ந்து சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக பிருந்தா என்ற வெப் சீரீஸை திரிஷா பண்ணுகிறார். மேலும் நீண்டகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் படம் சதுரங்க வேட்டை 2.

Also Read : கிணத்துல போட்ட கல் போல் ஆன திரிஷா பொழப்பு.. கணவாய் போன கட்டிய கோட்டை

இந்த படத்தில் திரிஷா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதை தொடர்ந்து ஆறாவதாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் ஒன்றில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை கௌரவ் நாராயணன் இயக்குகிறார். இவ்வாறு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மிகவும் பிஸியாக உள்ளார்.

தற்போது உள்ள இளம் நடிகைகள் கூட கைவசம் இவ்வளவு படங்கள் வைத்திருப்பதில்லை. ஆனால் திரிஷா இந்த வயதிலும் தனது அழகை மெருகேற்றிக் கொள்வதுடன் படங்களிலும் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகள் பின்னுக்குச் சென்றதால் கோலிவுட்டில் இப்போது திரிஷாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

Also Read : புத்தியை கத்தி மாதிரி பயன்படுத்திய திரிஷா.. மக்கு போல் மாட்டிக் கொண்டு முழிக்கும் பழைய லேடி சூப்பர் ஸ்டார்

Trending News