வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் சேதுபதியே நினைத்தாலும் இதுமாதிரி ஹிட் இனி கொடுக்க முடியாது.. ஹீரோவாக முத்திரை பதித்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி தற்போது வில்லனாக கலக்கி வருகிறார், மேலும் தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை ஒன்னுக்கூட விடாமல் பல மொழிகளில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இருந்தாலும் இவரது ஹீரோ கதாபாத்திரத்திற்கென தனி ரசிகர்கள் உண்டு. ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் காதல், சென்டிமென்ட், குடும்ப கதை என விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 5 படங்களை தற்போது பார்க்கலாம் .

பண்ணையாரும் பத்மினியும் : இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருப்பர். வயதானாலும் தங்களது காதலை எப்படி பரிமாறிக்கொள்கிறார்கள் என்ற கதைக்களத்தோடு இப்படத்தின் கதை நகரும். பண்ணையாராக நடித்த ஜெயபிரகாஷ் தனது காதல் மனைவிக்காக 50 வயதிலும் கார் ஓட்ட கத்துக்க போராடுவார். இவற்றை காணும் விஜய்சேதுபதி அவர்களின் காதலை நெகிழ்ந்து பார்க்கும் காட்சி அற்புதமாக இருக்கும்.

Also Read : ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

96 : விஜய் சேதுபதியின் படங்களிலேயே சிறந்த படம் என்று சொல்லும் அளவிற்கு 96 படம் அமைந்திருக்கும். த்ரிஷா, ராமின் ஜானுவாக கடைசி வரை அழகாக வலம் வந்திருப்பார். தனது காதலை மறக்க முடியாமல் படம் முழுவதும் காமம் இல்லா காதலை தன் காதலியிடம் வெட்கத்துடன் வெளிப்படுத்தும் ராமின் கதாபாத்திரம் என்றுமே நம் மனதில் நீங்கா ஒன்று.

தர்மதுரை : இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தர்மதுரை திரைப்படம் மாஸ் ஹிட்டானது. தனக்காக உயிரிழந்த தனது காதலியை நினைத்து கண்ணீருடன் உலா வரும் விஜய்சசேதுபதி, தனது கல்லூரிக் கால நினைவுகளுடன் படத்தில் உலா வருவார். வாழ்க்கையில் மறுபடியும் 100 சதவிகிதம் அழகான காதல் பூக்க வாய்ப்பு இருக்கும் என்பதை விஜய்சேதுபதி, தமன்னாவின் நடிப்பு பார்க்கும் நம்மை நெகிழ வைக்கும்.

Also Read : அடுத்தடுத்து தயாரிப்பாளர்களை காலி செய்த விஜய் சேதுபதி.. உதவி செய்ய வந்து உபத்திரவமான கதை

காதலும் கடந்து போகும் : இயக்குனர் நலன் குமாராசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா உள்ளிட்டோர் நடித்திருப்பார். வேலை இழந்து வாடும் கதாநாயகிக்கு ஆதரவாக எதிர்வீட்டில் இருக்கும் விஜய்சேதுபதியின் கதிர் கதாபாத்திரம், படத்தில் விறுவிறுப்பை கொடுத்திருக்கும். எதிரிகளாக அறிமுகமாகி, நண்பர்களாக பழகி, கடைசி வரை இவர்களின் இனம்புரியாத அன்பு காதலா, நட்பா என அறிந்துகொள்ள முடியாதவாறு இவர்களின் நடிப்பு இருக்கும்.

ஆண்டவன் கட்டளை : இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருப்பர். வெளிநாட்டுக்கு செல்ல முயற்சி செய்துகொண்டிருந்த விஜய்சேதுபதியின் பாஸ்போர்ட்டில் ஏற்பட்ட பெயர் பிழையால் பல இன்னல்களை சந்திக்கிறார். கார்மேகக்குழலி என்ற ஒற்றை பெயரை உள்ள கதாநாயகியை தேடி கண்டுபிடித்து, திருமணம் ஆகாமல் விவாகரத்து வரை செல்லும் காமெடி காட்சிகள், படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. கடைசியில் விஜய் சேதுபதி வெளிநாட்டுக்கு சென்றாரா, இல்லை தன் காதலுடன் இணைந்தாரா என்பது தான் இப்படத்தின் கதை.

Also Read : இன்னும் அவருக்கு மட்டும் வில்லனாக நடிக்காத விஜய் சேதுபதி.. இயக்குனரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

Trending News