ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

மார்க் வாக் இருந்தும் மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா.. பௌலிங் செய்யாமல் ஜெயிக்க வைத்த வெங்கடேஷ் பிரசாத்

1998ஆம் ஆண்டு நடந்த முக்கியமான போட்டி அது. ஆஸ்திரேலியா அணியுடன் அந்த போட்டியில் வென்றால் மட்டுமே நாம் தொடரை கைப்பற்ற முடியும். சென்னையில் நடந்த போட்டி என்பதால் இந்தியாவிற்கு சப்போர்ட் அதிகமாக இருந்தது. அசாருதீன் தலைமையில் டாஸ் ஜெயித்த பின் பர்ஸ்ட் பேட்டிங் செய்து இந்திய அணி 286 ரன் அடித்தது.

அந்த போட்டியில் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 126 ரண்களும் ராபின் சிங் 75 ரண்களும் அடித்தார்கள். அப்பொழுது இளம் புயல் அபாயகரமான பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா கடைசி நேரத்துல அதிரடியா விளையாடி 17 பந்துல 36 ரன் குவித்தார். இதனால் இந்திய அணி வலுவான இலக்கை எட்டியது

இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தது. ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை மார்க் வாக் கடைசிவரை அவுட்டாகம 136ரன் எடுத்து இந்திய அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்.அப்போதெல்லாம் மார்க் வாக் இந்திய அணி உடனான போட்டி என்றாலே மிரட்டி வந்தார்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்ரீநாத் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ராபின் சிங் 2, வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். அந்த போட்டியில் கடைசி பந்தில் 3 ரன் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி என்றானது. அந்த ஓவரை வீசியது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜவகல் ஸ்ரீநாத்.

மார்க் வாக்கும், மெக்ரத்தும் ஆடிக்கொண்டிருந்தனர். மார்க்வாக் மிட் திசையில் அடித்த பந்து பவுன்ட்ரிய நோக்கி சென்றது லாங் ஆண் திசையில் இருந்து பறந்து வந்த வெங்கடேஷ் பிரசாத் டைவ் அடித்து அபாரமாக பவுண்டரியை தடுத்து நிறுத்தினார். அங்கிருந்து குறிபார்த்து மிகத் துல்லியமாக ஸ்டம்பை நோக்கி எரிந்தார். அவ்ளோ தூரத்தில் இருந்து ஸ்டம்புகளை எரிகிறதெல்லாம் பெரிய விசயம். ஆனா வெங்கடேஷ் பிரசாத் அதை அசால்ட்டா செய்தார் இரண்டாவது கண்ணுக்கு மெக்ராத் கிரீஸ்க்குள்
நுழைவதற்குள் ஸ்டெம்ப் இரண்டடி பரந்தது.

மிக நேர்த்தியாக மெக்ராத் ரன் அவுட் செய்யப்பட்டார். அந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெங்கடேஷ் பிரசாத்துக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது .அந்த போட்டியை அவர் வாழ்நாளில் மறந்திருக்க மாட்டார். மார்க் வாக் இருந்தும் கடைசி வரை அடிக்க முடியாமல் வெங்கடேஷ் பிரசாத் கையால் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா.

Trending News