புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணசேகரனுக்கு விழுகிற ஒவ்வொரு அடியும் மரண அடி.. தர்ஷனியை கடத்தியதால் கதிர் செய்யப் போகும் சம்பவம்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ரேணுகா மற்றும் நந்தினி இத்தனை நாட்களாக ஒற்றுமையாக இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது கட்டின புருஷன் நல்லவராக மாறியதும் இருந்த நிலைமையை மறந்து இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்ததும் குணசேகரனுக்கு அப்படியே உச்சி குளிர்ந்து விட்டது.

அத்துடன் குணசேகரன், ஜான்சி ராணி மற்றும் கரிகாலணையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தர்ஷினியை கல்யாணம் பண்ணி வைப்பதற்கு ஒரு பக்கம் பிளான் பண்ணி வருகிறார். இன்னொரு பக்கம் தர்ஷினியை யாருக்கும் தெரியாமல் கடத்தி அடைத்து வைத்திருக்கிறார். தற்போது தர்ஷினி இருக்கும் இடத்தை போலீஸ் நெருங்கி விட்டார்கள். அத்துடன் தர்ஷினியை கடத்தி வைத்த நபரை பார்த்து பாலோ பண்ணி போகிறார்கள்.

அந்த வகையில் கூடிய விரைவில் தர்ஷினியை பாதுகாப்பாக காப்பாற்றி விடுவார்கள். அந்த நேரத்தில் யார் கடத்தினார்கள் என்கிற உண்மை தர்ஷினிக்கு மட்டும் தெரிந்ததால், அவர் மூலம் எல்லா உண்மையும் அனைவருக்கும் தெரிந்து விடும். அப்படி மட்டும் உண்மை தெரிந்து விட்டால் கதிர் செய்யப் போகும் சம்பவம் தான் மிகத் தரமாக இருக்கப் போகிறது.

Also read: ரோகிணி மூஞ்சியில் கரிய பூசிய ஒட்டுமொத்த குடும்பம்.. பார்லர் விஷயத்தை வைத்து மிரட்டும் முத்து

என்னதான் முரடனாகவும், கெட்டவனாக இருந்தாலும் குடும்பம் பிள்ளைகள் மீது கொஞ்சம் பாசம் இருக்க வேண்டும். அதுவும் பெத்த பிள்ளையை கடத்தி வைத்து இந்த அளவுக்கு கொடுமைப்படுத்திய நீ ஒரு மிருக ஜென்மம். உனக்கு இனிமேல் எமன் நான் தான் என்று குணசேகரனை எதிர்த்து நிற்கப் போகிறார் கதிர்.

அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரிக்கும் இந்த உண்மை தெரிந்ததற்கு பிறகுதான் குணசேகரனுக்கு ஒவ்வொரு அடியாய் கொடுக்கப் போகிறார். அந்த வகையில் இனி விழுகிற ஒவ்வொரு அடியும் மரண அடியாக இருக்கப் போகிறது. இதனால் வரை கதிர் தன்னுடன் பக்கபலமாக இருக்கிறார் என்று ஓவராக ஆட்டம் போட்டார்.

ஆனால் தற்போது எதுவும் இல்லாததால் மொத்தமாக சரியப் போகிறார். ஆனால் அதற்குள் இந்த மருமகள்கள் ஒற்றுமையாக இருந்து அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றி சொந்த காலில் நின்னு ஜெயிக்க வேண்டும். அத்துடன் வடிகட்டின முட்டாளாக இருக்கும் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணிக்கு ஆதிரை ஒரு சம்பவத்தை செய்யப் போகிறார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

Trending News