Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விஜய்யை பின்பற்றும் சினிமா பிரபலங்கள்.. போயஸ் கார்டனில் குவியும் ரகசியம் இதுதான்!

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. விஜயின் கடைசி மூன்று படத்தையும் இயக்கிய அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார் ஆகிய இயக்குனர்கள் அடுத்து பெரிய நடிகர்களின் படங்களை […]

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. விஜயின் கடைசி மூன்று படத்தையும் இயக்கிய அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார் ஆகிய இயக்குனர்கள் அடுத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்.

இதற்கெல்லாம் விஜயின் அதிர்ஷ்டம் தான் காரணம் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் தற்போது விஜய்யின் இயக்குனர்கள் புதிய பிளாட் வாங்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் சாதனை படைக்கிறது.

இதனால் விஜய் படத்தை இயக்கும் இயக்குனர்களின் மார்க்கெட்டும் அதிகமாகிறது. இதனால் அவர்களின் சம்பளமும் உயர்கிறது.
சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பெரிய நிறுவனத்தின் தலைவர்கள் வசிக்கும் இடம் போயஸ் கார்டன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் போயஸ் கார்டனில் தான் உள்ளது. நடிகர் தனுஷும் போயஸ்கார்டனில் இடம் வாங்கி மிகப்பெரிய வீடு கட்டி வருகிறார். அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு வீடும், அவருடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு வீடு வாங்கி உள்ளன.

விஜயின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லியும் போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அதுவும் சொல்லி வைத்த மாதிரியே அதே போசியம் அப்பார்ட்மெண்டில் வாங்கியுள்ளார்.

இதனால் விஜய் படத்தை இயக்கிய இயக்குனர்கள் அடுத்தடுத்து போயஸ்கார்டனில் அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார்கள். அட்லியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் போயஸ்கார்டனில் வீடு வாங்கி உள்ளதால் கோடம்பாக்கத்தில் இது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கூடியவிரைவில் நெல்சனும் போயஸ் கார்டனில் வீடு வாங்க வாய்ப்பு உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.