வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உதயநிதி தொட்டதெல்லாம் துலங்குது.. ரெட் ஜெயன்ட் மூலம் பல கல்லாப்பெட்டியை நிரப்பிய 5 பிளாக்பஸ்டர் படங்கள்

Red Gaint Movies: நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகராகவும், மேலும் படங்களை விநியோகிக்கும் உரிமை பெற்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் லாபம் பார்த்து வருகிறார் உதயநிதி. தற்போது இவர் விநியோகத்தில் அதிக லாபம் கொடுத்து, தெறிக்க விட்ட 5 படங்கள் குறித்த தகவல் இங்கு காண்போம்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் மூலம் விநியோகத்தில் லாபம் பார்த்து வரும் உதயநிதிக்கு இனி ஜாக்பாட் தான் என சொல்லும் அளவிற்கு பல ஹிட் படங்கள் அமைந்து வருகிறது. இவர் மேற்கொள்ளும் அனைத்து படங்களும் தொடர் வெற்றியை பெற்று வருகிறது.

Also Read: பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய 6 பிரபலங்கள்.. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கமல்?

அந்த வரிசையில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான் துணிவு. இப்படம் 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று தந்தது. மேலும் இப்படம் மக்கள் இடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து 5 மடங்கு லாபத்தை டாடா படத்தின் மூலம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கல்லா கட்டியது. சுமார் 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது.

சமீபத்தில் நகைச்சுவை நடிகர் ஆன சூரி முன்னணி கதாநாயகனாக நடித்து வெற்றி கண்ட படம் தான் விடுதலை. இப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகித்தது. இதன் நான்கு நாள் வசூலே 28 கோடி எனில், அதுவும் லாபகரமாக தான் அமைந்தது. மேலும் பிரம்மாண்டத்தின் படைப்பாய் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னின் செல்வன் 2 வை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகித்தது.

Also Read: கவர்ச்சி நடிகையுடன் தொடர்பில் இருந்த ரஜினி.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்

சுமார் 350கோடியை பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது. அதை தொடர்ந்து வடிவேலு, உதயநிதி இணைந்து நடித்த படம் தான் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி தான் தயாரிப்பு, என்பதால் சொல்லவே தேவையில்லை. இப்படம் சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 50 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது.

தற்பொழுது அரங்கத்தை நிறைத்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் தான் மாவீரன். இப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகித்துள்ளது. மேலும் இப்படம் வெளிவந்து ஐந்து நாட்களில் சுமார் 50 கோடி கலெக்ஷனை கல்லா கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: போதிதர்மனுக்கு முந்தியே அசம்பாவிதங்களை கணித்த கமலின் 5 படங்கள்.. ஊழலில் கலங்க வைத்த மகாநதி

Trending News