வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மதத்தை சுக்குநூறாக நொறுக்கிய பகத் பாசில்.. விக்ரமுக்கு சவால் விடும் நிலை மறந்தவன்

கடந்த மாதம் உலக நாயகன் கமலஹாசன் உடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் தாறுமாறாக வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பகத் பாசில் நடித்த மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

பகத் பாசில் தனது மனைவி நஸ்ரியாவுடன் இணைந்து நடித்த ‘நிலை மறந்தவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இதன்பிறகு இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் படத்தை படக்குழு ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை மலையாளத்தில் வெளியான ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அன்வர் ரஷீத் இயக்கி உள்ளார், நிலை மறந்தவன் திரைப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் பகத் பாசில் ஜோடியாக அவருடைய மனைவி நஸ்ரியா நடித்துள்ளார்.

இவர்களுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், செம்பான் வினோத், விநாயகன், திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பலை பற்றிய கதைதான் இது.

இந்த கும்பலில் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞனான பகத் பாசில் அறியாமையினால் அந்தக் கும்பலுக்கு துணை போகிறார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்ததும் அந்தக் கும்பலுக்கு எப்படி பாடம் புகட்டுகிறார் என்பது மீதி கதை.

இதில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் தங்களுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கின்றனர் என்பதை டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. இந்தப் படத்தில் பகத் பாசிலுக்கும் வில்லனாக டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கோலி சோடா 2 படத்தில் நடித்த செம்பான் வினோத் ஆகிய இருவரும் வில்லனாக நடித்திருக்கின்றனர்.

Trending News