ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித்திற்கு டஃப் கொடுக்கும் பிரபல நடிகர்.. என்னது சரக்கு கடையில வேலை பார்த்தாரா

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் இடம் பெற்றிருந்த பைக் ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்திருந்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்காக கேரளா சென்று சிகிச்சை பெற்றார். அவ்வாறு அஜித் பைக், கார் ரேஸில் ஆர்வம் உடையவர். தற்போது ஏகே 61 படத்தில் நடித்துவருகிறார்.

இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கோலிவுட் சினிமாவிலேயே பிளைட் ஓட்டக் கூடிய ஒரே ஆள் என்றால் அது அஜித் தான். தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிரபல நடிகர் ஒருவர் பிளைட் ஓட்டும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வினய். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வினைக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இது தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டாக்டர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.

ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் தற்போது வில்லனாக மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு விஸ்கி கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கியிலும் வேலை பார்த்துள்ளார். சினிமா மேல் உள்ள ஆர்வத்தினால் படங்களில் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வினய் விமானம் ஓட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறிய ரக விமானம் ஒன்றை வினய் ஓட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் வினய்க்கும், நடிகை விமலா ராமனுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

Trending News