மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிம்பு தற்போது பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தலை போன்ற திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
இதை அடுத்து சிம்பு கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் கோகுல் இயக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த வருடமே வெளிவந்தாலும் தற்போது தான் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பும் ஒரு வகையில் காரணம். இதனால் சிம்பு இந்த படத்தில் நடிப்பதற்கு தனக்கு நிகரான ஒரு மிகப் பெரிய வில்லன் தான் வேண்டும் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.
இதனால் இயக்குனர் இந்த கதையை பகத் பாசிலிடம் கூறியிருக்கிறார். தற்போது வில்லன் வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அவருக்கு இயக்குனர் கூறிய இந்த கதை ரொம்பவும் பிடித்து விட்டதாம். இதனால் கூடிய விரைவில் சிம்பு, பகத் பாசில் கூட்டணியில் இப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபகாலமாக பகத் பாசில் மலையாளத் திரைப்படங்களை விட தமிழ் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதிலும் வில்லன் கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. இதனால் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யாவிற்கு பின் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க பகத் பாசிலுக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
போகிற போக்கை பார்த்தால் பகத் பாசில் கேரளாவை மறந்துவிட்டு தமிழ்நாட்டில் செட்டில் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்களும் இவரைத்தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர்.