ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

40 வயதிலும் மவுசு குறையாத சிரிப்பு நடிகை.. படத்தை விட இதில தான் வருமானம் ஜாஸ்தியாம்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ரசிகர்களின் கனவு கன்னியாக தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். அப்படி பிரபலமாக இருந்த சில நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார்கள். ரசிகர்களும் அப்படி ஒரு நடிகை இருப்பதையே மறந்துவிடுவார்கள்.

ஆனால் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக குஷ்பு, மீனா உள்ளிட்ட பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வரிசையில் புன்னகை அரசி சினேகாவுக்கும் ஒரு நிரந்தர இடம் உண்டு.

தன்னுடைய அழகான சிரிப்பாலும், குடும்பப்பாங்கான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் முன்னணி ஹீரோயினாக ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால் சினிமாவில் ஒரு காலகட்டம் வரை தான் நடிகைகளுக்கு மதிப்பு இருக்கும் என்பது எழுதப்படாத விதி. புது புது நடிகைகளின் வரவால் பல முன்னணி நடிகைகளுக்கும் சினிமா வாய்ப்பு குறையும். அதேபோல் சினேகாவுக்கும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

அதனால் அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன்பிறகும் ஒருசில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் கடைசியாக தமிழில் தனுஷுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த அவருக்கு சின்னத்திரையின் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சினேகாவை நிகழ்ச்சிகளில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அதை பயன்படுத்திக்கொண்ட சினேகா அந்த நிகழ்ச்சியில் ஏராளமான சம்பளம் பெற்று காசு பார்க்கத் தொடங்கினார். மேலும் விளம்பர படங்களிலும் அவர் தற்போது அதிக அளவில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட திறப்பு விழாவுக்கும் இவர்தான் முதல் சாய்ஸாக இருக்கிறார்.

அப்படி அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு சினேகா எக்கச்சக்கமாக பணம் பெறுகிறார். ஒரு மணி நேர விழாவுக்கு இவ்வளவு பணமா என்று கடையின் உரிமையாளர்கள் அதிர்ந்தாலும் சிலர் அந்த பணத்தை கொடுக்க தயாராகவே இருக்கின்றனர்.

ஏனென்றால் 40 வயதை கடந்த பின்னும் சினேகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது என்பதுதான். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல சினேகாவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.

Trending News