புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கதீஜா கேரக்டரில் நடிக்க இருந்த பிரபல நடிகை.. விக்னேஷ் சிவன் சொல்ற காரணம் எதுவும் நம்புற மாதிரி இல்ல

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மேலும் இப்படம் ஒரு முக்கோண காதல் கதையாக எடுக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது விக்னேஷ் சிவன் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் சமந்தா நடித்த கதீஜா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தமனார் என்ற தகவலை கூறியுள்ளார்.

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட ரசிகர்களுக்கு கதீஜா கதாபாத்திரம் தான் அதிகம் கவர்ந்துள்ளது. இப்படத்தில் தன்னுடைய கவர்ச்சி மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது சமந்தா.

இதில் முதலில் திரிஷா தான் ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் படத்தின் சூட்டிங் பல நாட்கள் தள்ளிப்போனதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அதன் பிறகு நயன்தாரா சமந்தாவிடம் பேசி இப்படத்திற்கு ஒப்பந்தம் வாங்கினார்.

மேலும் சமந்தா தனது ஒத்துழைப்பை கொடுத்து நன்றாக அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார் என அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் சமந்தாவை பற்றி கூறியிருந்தார். ஆனால் இவர் சொல்றது நம்புற மாதிரியா இருக்கு என ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதாவது சமந்தா படு பிசியான நடிகை. ஆனால் திரிஷாவுக்கு தற்போது அதிக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால் சமந்தாவை விட திரிஷா பிஸியாகவா இருக்க போறாங்க என்னப்பா காதுல பூ சுத்துற என ரசிகர்கள் விக்னேஷ் சிவனை விமர்சித்து வருகின்றனர்.

Trending News