ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அந்த அம்மணி குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
அந்த அம்மணியை நிகழ்ச்சியில் பார்த்துவிட்டு, அடுத்த படத்தில் நடிக்க அவங்களை கேட்டுப்பாருங்கள் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தூது அனுப்பி உள்ளனர். இதனை கேட்டு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அந்தத் பிரபலத்தை நாட அம்மணி எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை விட்டுவிடுங்கள் என டீசன்டாக கூறியுள்ளார்.
முன்னணி நடிகர்கள் பலர் வலை வீசியும் சிக்காத அந்த பிரபலம் பல வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஆட்சி செய்தவர். அவர் நான் தொழில் தொடங்க இருப்பதாகவும், அதற்காக வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுவதாகவும் கூறி, அந்த நிகழ்ச்சியில் இருந்து பிற்காலத்தில் வெளியேறிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியிலேயே, எனக்கு மக்கள் தரும் ஆதரவு போதும். நான் ஒரு வேளை சினிமா துறைக்கு வந்து விட்டால் என்னுடைய பெயர் கெட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் என்வீட்டில் இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டார்கள் என வெளிப்படையாகவே ஒரு பேட்டியில் கூறி நடிகர்களை அதிர விட்டார்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனைவரும் டார்ச்சர் கொடுக்கவே ஒரு கட்டத்தில் தான் தொகுத்து வழங்கிய வேலைக்கு, முழுக்குப் போட்டு கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கல்யாணத்துக்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகள் வரவே சினிமா வேண்டவே வேண்டாம், நிகழ்ச்சியை வேண்டுமானால் தொகுத்து வழங்குகிறேன் என விடாப்பிடியாக கூறிவிட்டார்.