புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அவரிடம் அடிவாங்கியே கத்துக்கிட்ட ஷங்கர்.. வெளிப்படையாக மானத்தை வாங்கிய பிரபல ஹீரோ

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தில் கிரேன் சாய்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கர், கமலஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைக்கா இவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது ஒருவர் மற்றவருடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு, ஒருவர் மற்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரச்சனையை பெரிதாக்கினார்.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இந்தியன் 2 படத்தை துவங்குவதற்காக சங்கர், லைக்கா, கமலஹாசன் மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பிறகு படத்தை விரைவில் துவங்க முடிவெடுத்தனர். இந்தியன் 2 படத்தில் சங்கர் ஏகப்பட்ட விமர்சனங்களைப் பெற்றார்.

இந்நிலையில் சங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருவதற்கு முன்பு ஆரம்பத்தில் அவர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவரிடம் அடிவாங்கியே நிறைய விஷயங்களை சங்கர்  கற்றுக் கொண்டதாக  சரண்ராஜ்  தற்போது தன் பேட்டியில் கூறியுள்ளார். நீதிக்கு தண்டனை என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் சரண்ராஜ் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகர். அப்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றிய சங்கரை எஸ் ஏ சந்திரசேகர்  அடித்து அடித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பாராம். ஹீரோக்கள் தப்பு செய்தால் கூட சங்கரை கூப்பிட்டு அடிப்பாராம் சந்திரசேகர்.

இப்படி அடி வாங்கி கற்றுக் கொண்டதால் தான் இன்று அவர் சிறந்து விளங்குகிறார் என்று சரண்ராஜ் கூறியுள்ளார். இவருக்கு சங்கர் மீது அப்படி என்ன கோபம் தெரியவில்லை. உதவி இயக்குனராக இருந்தபோது அடி வாங்கியதை இப்போது வெளிப்படையாக கூறி சங்கரின் மானத்தை வாங்கிவிட்டார்.

saranraj-cinemapettai
saranraj-cinemapettai

Trending News