வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆச்சி மனோரமா அளவிற்கு பேசப்பட்ட நடிகை.. கமலை வியக்க வைத்த அந்த பிரபலம் யார் தெரியுமா.?

தன்னுடைய சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை காரணமாக 12 வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர் மனோரமா. அதன் பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க, கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுடன் மனோரமா நடித்துள்ளார். இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆனா ஆச்சி மனோரமா போல் மலையாள சினிமா உலகில் மனோரமா என்ற அழைக்கப்படுபவர் KPAC லலிதா. இவர் பலமொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். லலிதா சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இவர் தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். 1980-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ராஜபார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தளபதி விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக லலிதா நடித்திருந்தார்.

இப்படத்தின் கிளைமேக்ஸில் “எடுத்துக்கங்க உங்க வீட்டு பொண்ண” என்ற டயலாக் பேசும் அம்மையார் இவர்தான். இவர் மேலும் தமிழில் கிரீடம், பரமசிவன், அலைபாயுதே போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வீட்ல விசேஷங்க, மாமனிதன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த வாரம் 22 ஆம் தேதி தன்னுடைய 74 ஆம் வயதில் மரணம் அடைந்தார். மலையாள சினிமாவின் மனோரம்மா இவர் தான் என உலகநாயகன் கமலஹாசன் அடிக்கடி பாராட்டுவார்.

கமலஹாசனின் மறக்கமுடியாத படங்களில் ஒன்றான தேவர் மகன் படத்தை இயக்கிய பரதனின் மனைவி தான் லலிதா. அதுமட்டுமல்லாமல் கமலஹாசன் தன்னுடைய அம்மா என்று போற்றிய ஒரே நடிகையும் லலிதா தான்.

Trending News