வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வன் படத்தை கைப்பற்றிய பிரபல ஒடிடி நிறுவனம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் அதிக திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் அவர்களது சம்பளமே மிகப்பெரிய தொகையாக இருந்திருக்கக் கூடும். இந்நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ஐந்து மொழிகளில் வெளியாகயுள்ளது.

தற்போது படத்தின் ப்ரமோஷன் பிரமாண்டமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு நடந்தது. மேலும் இப்படம் கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர் போன்ற படங்களைப் போல் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் எல்லா மொழிகளிலும் பொன்னியின் செல்வன் படம் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல டிப்ஸ் நிறுவனம் 24 கோடிக்கு கைப்பற்றியதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் திரையரங்கு ரிலீசுக்கு பின்பு பிரபல ஒடிடி நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது.

அதாவது அமேசான் நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை 125 கோடி கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை வாங்குவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது.

ஆனால் தற்போது அமேசான் 125 கோடி கொடுத்து படத்தை வாங்கியதால் 150 கோடி கொடுத்தாவது பொன்னியின் செல்வன் படத்தை வாங்கி இருக்கலாம் என பிரபல ஒடிடி நிறுவனம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமேசான் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தை வாங்கியதால் இப்படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

Trending News